ஒன்பதாவது தூய்மை ஆய்வின் மூன்றாவது காலாண்டுப் பணி தொடங்கியது
ஒன்பதாவது தூய்மை ஆய்வின் மூன்றாவது காலாண்டுப் பணியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கவுள்ளது. அதிகப்படியான கழிவுகளை உருவாக்குவோரிடம் ஒட்டுமொத்த மதிப்புத் தொடர் கழிவு நிர்வாகத்தை மதிப்பீடு செய்வது மூன்றாவது கட்டத்தின் மையப்பொருளாக இருக்கும்.
நகர்ப்புற இந்தியா நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் கழிவுகளை உருவாக்குகிறது. வளர்ந்து வரும் நகரமயம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாக, நகராட்சிப் பகுதியில் திடக்கழிவு கணிசமாக அதிகரிக்கிறது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக மதிப்பீட்டின்படி, நகரத்தில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான கழிவு அதிகப்படியான கழிவுகளை உருவாக்குவோரால் ஏற்படுவது.
குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள், மத்திய அரசு அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், உணவு விடுதிகள், பல்கலைக்கழகங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவை அதிகப்படியான கழிவுகளை உருவாக்குகின்றன. இவற்றில் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மட்கும் குப்பையைப் பிரித்து அறிவியல் நடைமுறை மூலம் உரம் மற்றும் எரிவாயுவை உருவாக்குவதற்கான அலகுகளை அந்தந்த வளாகங்களில் அமைப்பதை உறுதி செய்யவேண்டும்.
தூய்மை ஆய்வின் மூன்றாவது காலாண்டுப் பணி ஜூலை 5 அன்று தொடங்குகிறது. 4-வது காலாண்டுப் பணி, 2024, செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள்