முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகின

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாகத் தோ்தல் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியில்  துவங்கி  நேற்றுடன் நாட்டின் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த நிலையில் வாக்குப் பதிவுக்குப் பின்பான கருத்துக் கணிப்புகளை சில அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சில பிரபலமான நிறுவனங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வெளியிடுகின்றன.     





 தமிழ்நாட்டில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம். கீழே இருப்பவர்கள் மேலே போகலாம். அதைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படக் கூடாது. நமக்குக் கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம். பாரதிய ஜனதா கட்சி 3 ஆவது முறையாக ஆட்சியமைக்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்; ஜூன் மாதம் 4 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின்  வெற்றியைக் கொண்டாடத் தயாராகுங்கள்   எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமல்ல, எவ்வளவு வாக்கு என்பதே முக்கியம்.வெற்றியை கொண்டாட தயாராகுங்கள். இது காங்கிரசின் கோட்டை எனக்கூறுவது ஜீன் மாதம் 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் இருக்காது. ஜூன் மாதம் 4 ஆம் தேதிக்குப் பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது.



தாமரை அடர்ந்து,படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் மாதம் 4 ஆம் தேதிக்கு பின்னர் அனைவரும் பார்ப்பார்கள். எனக்  கூறினார். அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஆலய தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவிலை விட்டு வெளியே வந்ததும்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் சீரியஸாக பேசியதும் கவனம் பெற்றது.



நடந்து முடிந்த தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் குறித்து அண்ணாமலையிடம் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை செய்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் நிலவரம் சரியாக இல்லை. மற்ற மாநிலங்களில் பாஜக வலுவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பலமில்லை.


இந்த முறை தமிழ்நாட்டில் பாஜக முன்னணி தலைவர்கள் பலர் போட்டியிட்டுள்ள நிலையில் இந்த முடிவுகளை  தீவிரமாகக் கவனிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில் தான் அண்ணாமலையிடம் அமித் ஷா தீவிரமாக பேசினார் என அறியலாம் இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து தீவிரமான கருத்துக்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவிக்கிறார். 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் பட்சத்தில் முதல் சிக்கல் யாருக்கு ஏற்படும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருக்கும் Godi மீடியா என்று அழைக்கப்படும் வட இந்திய பல  ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்கும் என அவர் கூறியுள்ளார்.  தமிழ்நாட்டில் திமுக 


டெல்லியில் I.N.D.I.A. கூட்டணி தமிழ்நாடு திமுக அணி என்பது பலரின் தற்போதய பார்வை

பாஜக இல்லாத மந்திரிசபை, பத்து ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் உறுதிப்பட்டு உள்ளதெனவும் I.N.D.I.A. கூட்டணி, மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு, நேர்த்தியாக கைகூடியுள்ளது. எனவும் தமிழ் நாட்டின் ஒரு மூத்த பத்திரிகையாளர் பார்வை அதிகாரம் இல்லாத நரேந்திர மோடி எப்படி இருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு, பிரதமர் நரேந்திர மோடியின் சக்தியும் விதவிதமான தோற்றங்களும், பயணங்களும் மட்டுமே, பலரது நினைவில் வந்து போகிறது.



அதனால் தான், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எப்படியோ தெரியவில்லை. மத்தியில் பிஜேபி தான்” எனப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிற மனநிலையில் தான் பலரும் உள்ளனர். நாம் அன்றாடம் சந்திக்கும் நூறு பேரில் தொண்ணூறு பேர், அப்படியான பதிலைத்தான் தருகின்றனர். எனவும் அது கட்டமைக்கப்பட்ட ஒரு மாயையில் தாங்கள் சிக்கியிருப்பதை உணரவும் மறுக்கிற பரிதாபமான மக்கள் தான் இங்கு ஏராளம்.



மக்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படைத் தேவையான சமையல் எரிவாயு உருளையில் துவங்கி பெட்ரோல் – டீசல் என ஒவ்வொன்றாய் ஏறிய விலைப்பட்டியலை அடுக்கினால், “அட! ஆமா, பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்பு தானே இப்படி ஆச்சு” என வியப்புடன் நகர்கிறவர்களும் இதே மக்கள் தான். எளிதில் மக்கள், மறதிக்குப் போய் விடுகிறார்கள். திருகுவலி போல தினமும் ஒரு பிரச்சினை புதிதாய் முளைப்பதால், ஏற்கெனவே முளைத்திருந்த பிரச்சினைகள், மக்களுக்கு ஒரு பிரச்சினையாகவே தெரியாத அளவுக்கு பழகிப் போய் விட்டிருக்கிறது. இந்த பத்தாண்டு வாழ்வியல் முறை நீட் தேர்வு, GST, பண மதிப்பிழப்பு, கொரோனா தடுப்பூசி என பல அவஸ்தைகள் இப்போதைக்கு மக்களை அரசியல் மையப்படுத்தி தெளிய வைப்பது என்பது எளிதல்ல.







அதற்கான நேரமும் காலமும் குறைவு. அதே வேளையில் ‘கும்பி’ எரிவுடன் அன்றாடம் செத்துப்பிழைக்கும் அடித்தளத்து மக்கள், அம்பானி வீட்டில் அணிந்து வலம் வரும் தங்கதிலான உடைகளை அறியாத வறியவர்கள், தங்கம் விலை உயர்வு தற்போது தவிர்க்க முடியும் ஆனால் முடியாத நிலை வர இவர்களின் கொள்கை முடிவுகளும் ஒரு காரணம். பாஜகவை தமிழ்நாட்டில் கரைசேர விட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையும் – அதே மனநிலை அகில இந்திய அளவிலும் தற்போது உண்டாகியிருப்பதை இங்கே கவனிக்க வேண்டியதும் அவசியமாகியுள்ளது.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, தேர்தல் முடிவுகள் அமையப் போவதற்கான காரணத்தை அடுக்க ஆரம்பித்தால் இன்னொரு தேர்தலே அதற்குள் வந்துவிடும். தமிழ்நாட்டிலும் அதேதான் நிலைமை தான். மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி,  சில தொகுதிகளை மட்டும், ‘சிங்கிள் டிஜிட்’ டில் அதாவது இரண்டு முதல் ஐந்து வரை இழக்கக்கூடும் எனத் தான் தோன்றுகிறது. சரியாய்ச் சொல்லவேண்டுமானால் ஒன்றிரண்டு தொகுதிகள். குறிப்பாக தர்மபுரி சௌமியா அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி அதில் ஒன்றாக இருக்கக் கூடும்.




தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கேலிக் கூத்தாக்கும் விதமான பாரதிய ஜனதா கட்சியின்  செயல்பாடுகளை அம்பலப்படுத்தி வந்த வகையில் திமுகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி இதுவாகும். “தற்போதிருக்கும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் யாரும் தோற்றுப் போக வாய்ப்புகளே இல்லை- அப்படியே தொடர்கிறார்கள்” எனக் கூறலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதிமுக என்பது செல்வி ஜெ.ஜெயலலிதா மரணம் துவங்கி சோதனையை


எதிர்கொண்டு கழுதை தேய்ந்து கட்டெறும்பு போல நிற்கும் காலகட்டம் இது. பல கூறுகள் ஆகி பாரதிய ஜனதா கட்சியோடு இரண்டறக் கலந்து விட்டதற்கான பரிசு தான் இது. ‘நான் அவன் இல்லை, என்பது போல இப்போது நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு இல்லை’ என்று அதிமுக அடித்துச் சத்தியம் செய்தாலும் அதை கேட்டுக் கொள்கிற மனநிலையில் மக்களில்லை. காலம் கடந்து விட்டது. அந்தளவுக்கு பாரதிய ஜனதா கட்சியால் தமிழ்நாட்டு மக்கள் துயரத்தைச் சந்தித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சிகள், அதன் தலைவர்கள் அனுபவிப்பதை விட அந்த மாநில மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் அதிகம். அந்த துயரத்துக்கான பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதை தமிழ்நாட்டில் திமுக தோலுரித்துக் காட்டியது போல பிற மாநிலக் கட்சிகள் எதுவும் இதுவரை அதைச் செய்யவில்லை. ஒட்டுமொத்த நாட்டின் எதிர்க்கட்சிகளுக்குமான வேலையை திமுக மட்டுமே பார்த்து வருகிறதென்றே சொல்லலாம். ஆனால் அவர்களிடம் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பது என்னவோ உண்மைதான்.



மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் வீழ்ச்சியும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிலுள்ள கட்சிகளின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் எப்படி சாத்தியம் என்ற கேள்வியே தேவையற்றது. வேறு வழியே இல்லை. ஆராய்ந்து பார்த்தால் அது சாத்தியமே. பத்தாண்டுகளில் பொதுமக்கள் எதிர்கொண்ட துயரங்கள் ஒவ்வொரு நாளும் நிம்மதியைத் தொலைத்த நாள்கள் தான்.




பணமதிப்பிழப்பு, கருப்புப்பணம் மீட்பு எனத் தொடங்கி போலியாய்- கட்டமைத்து, பொய்யாய் சித்தரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்கள், மக்களை இன்னமும் பதற வைத்தபடி தானிருக்கிறது. உச்சத்துக்குப் போன அதானிகள், அம்பானிகளின் வளர்ச்சியும் மும்மடங்கு வீழ்ச்சிக்குப் போன நாட்டின் நிதி மற்றும் பொருளாதார நிலையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்கள் பிச்சைக்காரர்களாய் தவித்த கொரோனா பரவல் காலகட்டத்தில், சொந்த மாநிலங்களுக்கு நடந்தே போய் செத்துப் போன வட மாநிலத்தில் நடந்த கொடூர நினைவுகளை, உயிரோடிரிப்பவர்கள் யாரும் இன்னும் மறந்திருக்கவில்லை, மறந்திருக்கவும்  மாட்டார்கள். நாட்டின் பிரதான பிரதம மந்திரி, நாட்டுக்கானவரல்ல- அவர் தனியாருக்கானவர் என்பதை பறைசாற்றுவது போல, “பி-எம் கேர் ஃபண்ட்” வரவுகளை தனியாராக்கிக் கொண்ட நிகழ்வுகள், இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு கரும்புள்ளியே. என எதிர்க்குரல் எழுப்பினால் அவர்கள் சிறை, ரெய்டு, கைது, வழக்கு என்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களை நோக்கி நகரும் கரங்கள், சட்டத்தின் கரங்களோ தர்மத்தின் கரங்களோ அல்ல என்பதை உரத்துச் சொல்லலாம். டெல்லி முதலமைச்சர் கைது – பஞ்சாப் போராட்ட விவசாயிகள் மீது டிராக்டர் ஏற்றி கொலை முயற்சி போன்ற ஓரிரு சம்பவங்களை நினைத்துப் பார்த்தாலே பகீர் என்றாகிறது.





அந்த வகையில் மத்தியில் ஆளும் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் சாதனை எதுவென்று பார்த்தால் மக்களின் வேதனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்படி பார்த்துக் கொண்டது தான். தமிழ்நாட்டு அரசியல் வாயிலாக மத்திய அரசின் அரசியலை பார்த்தாலே இந்தியாவிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி செய்யாத மாநிலங்கள் படும் வேதனையைப் புரிந்து கொள்ளலாம். அவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சி, இல்லையென்றால் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்தியா மீது படை எடுத்துப் போர்தொடுத்து இந்தியாவை அழித்து விடும் என்ற கூற்றை ஏற்க மறுத்து எதிர்க்குரல் கொடுத்த மாநிலத்தவர்களே.

போராடி அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் மந்திரி பதவி, அதைவிடப் போராடி, அமைச்சர் செந்தில் பாலாஜியை மந்திரியாக வைத்திருக்கத் துடித்த துடிப்பு- இதையெல்லாம் பண ஆதாயமாக மட்டும் திமுக என்ற கட்சி, தமிழ்நாட்டில் செய்திருக்குமா என்று பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை. திமுகவில் பணத்துக்கு பஞ்சமில்லை. பொன்முடியையும் செந்தில் பாலாஜியையும் திமுகவால் விட்டுக் கொடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் பாரதிய ஜனதா கட்சி தான். பாரதிய ஜனதா கட்சியின்  சார்பில் தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி தான். பழிச்சொல்லுக்கும், இழிச்சொல்லுக்கும் ஆளாவோம் என்று நன்கு தெரிந்தும், பாரதிய ஜனதா கட்சியோடு ‘சண்டை’ செய்யத் திமுக தயாரானது ! 



அந்தச் சண்டையின் வெற்றியைத்தான்  பொன்முடிகளும், செந்தில் பாலாஜிகளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பது மட்டுமே இலக்கு என்ற நிலையை, திமுக கையிலெடுத்தது. அதில் உறுதியான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறது. அதே வேளையில், திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக உறவிருப்பதாக எதிர்த்தரப்பும், ‘நிலை’ எடுத்தது. “பாஜகவின் பி – டீம் நீங்கள் தான்” எனத் திமுகவும் அதே ‘நிலை’ யை அடுத்தடுத்து அதாவது மீண்டும் மீண்டும் கையிலெடுத்தது. இப்படி, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கைகொண்ட பிரசார ஆயுதமே பாரதிய ஜனதா கட்சி என்ற கட்சியின் இருப்பை உறுதிப்படுத்த ஆரம்பித்து, பாஜக தமிழ்நாட்டில் நிலை பெறவும் துணை போனது. இதுதான் உண்மை.

நாட்டிலேயே கடைசி கட்சியாக தேர்தலுக்கு ஐந்து நாள்கள் இருக்கும் போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது, பாரதிய ஜனதா கட்சி 


 “மீண்டும் (?) ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் எனும் திட்டம் அமல்படுத்தப்படும்” என்பது பிரதான வாக்குறுதி. தமிழ்நாட்டு மக்கள் வாக்குகளைக் குறிவைத்து, உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்பது போன்ற சில வாக்குறுதிகளும், நரேந்திர மோடி கொடுத்துள்ளார். “தமிழை முழுமையாகப் பேச முடியவில்லை, தமிழனாக பிறக்க முடியவில்லை என்ற வேதனை வாட்டி எடுக்கிறது” என்று மேடையில் நரேந்திர மோடி முழங்கிய அடுத்த சில நிமிடங்களில் அகில இந்திய வானொலி நிலையம் பெயர் ஆகாஷவாணி என்று மாறுகிற மற்றும் கிரிமினல் சட்ட பெயர் மாற்றமும் நடந்த அளவுக்குத் தான் இவர்களின் தமிழ்ப்பற்று என்பது கண்கூடு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பாரதிய ஜனதா கட்சியினர், குறிப்பாய் பாஜகவின் தமிழ்நாட்டுப் பிரதிநிதியான ஆளுநர் ஆர்.என்.ரவி, போன்றோர் அளிக்கும் மரியாதையை அடித்தட்டு மக்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.எடப்பாடி கே பழனிச்சாமியின் கையில் கொடுத்து அதிமுகவை  அழித்த குற்றம் பாரதிய ஜனதா கட்சியை விட, மிகத் தவறான முடிவை எடுத்த வி கே சசிகலா நடராஜனையே சேரும்.


இப்படி ஒரு தவறான நபரை நெருக்கடியான நேரத்தில் பணத்திற்காக அவர் தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது என்பது அரசியல் அறிந்த பலர் கருத்து.

தமிழ் மொழிக்கு ஒதுக்கியதை விட மூன்று மடங்கு நிதியை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கியும்- தமிழ் வழி சித்த மருத்துவத்துக்கு ஒதுக்கியதை விட பலமடங்கு ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஒதுக்கியும், மத்திய பாரதிய ஜனதா கட்சியின்  அரசு, தமிழுக்காக தமிழ்நாட்டுக்காக தமிழ் நாட்டு மக்களுக்காக செய்து வரும் தொடர் சாதனைகளின் பட்டியல் நீளமானது. பாரதிய ஜனதா கட்சி ஆளாத அத்தனை மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. விலைவாசி உயர்வைப் பேசினால், ‘நான் தக்காளி, வெங்காயம் சாப்பிடுவதில்லை’ என்று பதிலளித்தும், ‘கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது’ என்று அடம்பிடித்தும் கம்பீரமாய் ? ! நிற்கும் நிதி மந்திரி வாழும் நாட்டில் வாழ்வதை விட வேறு பெருமை நமக்கு ஏதாவது உள்ளதா?

சனாதனத்திற்கு எதிராகப் போற்றியவர்கள் வடலூர் ராமலிங்க அடிகள் எனும் வள்ளலார், அய்யா  வைகுந்தர் என்று தங்கள் பிரதிநிதி ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் பேசுவதும், சன்மார்க்க வழி வந்தோரும்- அய்யா வைகுந்தர் பின் தொடர்பாளர்களும், திருப்பி அடித்ததும் ஓட்டம் பிடிப்பதுமாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின்  ஆடுபுலி ஆட்டம் அருவெறுப்பானது. மக்களாட்சி தத்துவத்தில் நிலை பெற்றிருக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவை, ‘அதிபர்’ நாடாக்கி, பின்னர் அதுவே மன்னராட்சி நாடாக மாற்றும் வேலைக்குத் தான் பாரதிய ஜனதா கட்சி, முழுமூச்சோடு வேலைபார்க்கிறது. என்ற பேச்சுக்கே இது இடம் தருகிறது,


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் மனிதவாழ்வின் மாண்பு. கீழோன் மேலோன் பிறப்பால் இல்லை. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பது மனித குலத்தில் எப்போதுமே இல்லை. இதுதான் தமிழ்நாட்டின் வழிவழி வாழ்வியல் நெறி. ஆனால் பாருங்கள், எந்தவொரு விளக்கமும் இதுவரை கொடுக்காமல் ஜனாதனம் என்றால் ஹிந்துமதம், ஹிந்துமதம் என்றால் ஜனாதனம் என்று அதற்கான ஒரு வடிவத்தை கட்டமைத்துள்ள விதத்தில் தான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி நோக்கிய உத்தியும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கையுள்ள அனைவருமே பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் என்று சொல்வது போலத் தான் இந்தக் கட்டமைப்பும். அதுவே தான் பாரதிய ஜனதா கட்சியையும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தையும் ஏழு கட்டமாக நடத்திய இந்தத் தேர்தல் மண் கௌவ வைக்கப் போகிறது. என ஒரு தரப்பினர் பேசுவதும் புரிகிறது, இந்த நிலையில் ஐ-பேக் நிறுவனம் தரப்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்' என தேர்தல் வியூக நிபுணராகப் பார்க்கப்படும் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார் .2014 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 44 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.


2019 ஆம் ஆண்டில், நடந்த தேர்தலில் கூடுதலாக 8 தொகுதிகளைக் கைப்பற்றி 52 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் 65, 68, 72 அல்லது 55 தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா? என்பதும், அவர்களுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்.          2024 மக்களவைத் தேர்தல் நிலவரம் தற்போது நிலவும் சூழ்நிலையில்  தேர்தல்-2024 முடிவுகள் இப்படி  இருக்குமென்று நான் நினைக்கிறேன். 

இந்தியா கூட்டணி: 256

காங்கிரஸ்: 120 

கூட்டணி கட்சிகள்: 136

(திமுக: 21

திரினாமூல் காங்கிரஸ் அதாவது மமதா பானர்ஜி: 20 

சமாஜ் வாதி அகிலேஷ் யாதவ்: 18

ஆர்ஜேடி: 15

சிவசேனா உத்தவ் தாக்கரே: 11

ஆம் ஆத்மி : 11

தேசிய வாத காங்கிரஸ் சரத் பவார்: 10

இரண்டு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் : 10

இதர கட்சிகள்: 20. எனவும் 

பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி: 250  இதில் 

பாரதிய ஜனதா கட்சி 220

கூட்டணிக் கட்சிகள் : 30

(சிவசேனா ஷிண்டே: 6

ஜேடி(யு): 4

அஜித் பவார்: 4 

அகாலி தளம்: 2

அப்னா தள்: 2

பாமக உள்ளிட்ட இதர கட்சிகள்: 12)

மற்றவை மொத்தம் : 36

(BJD நவீன் பட்நாயக்: 11

YSR ஜெகன் மோகன் ரெட்டி: 11

மாயாவதி பகுஜன் சமாஜ்: 4

டி ஆர்எஸ் : 4

இதர கட்சிகள்: 6)


ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலையை யாரும் துல்லியமாகக்  கணிக்க இதுவரை முடிந்ததில்லை. 

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அடல் பிகாரி வாஜ்பேயி புகழ் உச்சக்கட்டமாக இருந்த போது அப்போதைய பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 285 முதல் 300 வரை உள்ள இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பெறும் என்ற சூழலில் கோத்ரா கலவர சம்பவத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி லாவகமாக முன்னெடுத்து முடிவில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி 181 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி கூட்டணி 218 இடங்களிலும் வெற்றி பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும். 

பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி ஆட்சி அமைக்க 23 இடங்கள் குறைவாக இருக்கும் நிலையில் இந்தியாவில் யார் அடுத்த ஆட்சி அமைத்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கிய அங்கம் வகிப்பர்... 

தமிழ்நாட்டில்  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள். 

திமுக கூட்டணி 36 தொகுதிகளில்  மகத்தான வெற்றி பெறும். எனவும் 

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம். எனவும் 

அஇஅதிமுக இந்த தேர்தலில் 1 கோடி+ வாக்குகள் மட்டுமே பெறும். எனவும் ஆனால் ஒரு உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாது எனவும், 

சீமானின் நாம் தமிழர் கட்சி 36 இலட்சம் வாக்குகள் பெறும் எனவும் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாது. எனவும் இராமநாதபுரம் ஓ.பன்னீர் செல்வம், திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் இராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை கருப்பு முருகானந்தம். கரூர் செந்தில் நாதன் ஆகியோர் இரண்டாமிடம் பெறுவார்கள்.      கடந்த காலங்களில்  தனி நபர் செல்வாக்கு கோலோச்சாத அன்றைய பாரதிய ஜனதா கட்சி !

ஆனால், அளவுக்கு மீறிய அதிகார பலமும், பணபலமும் எந்தத் தனி மனிதனையும் அடியோடு மாற்றிவிடும். அது தான் பிரதமர் நரேந்திர மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. அடல் பிகாரி வாஜ்பேய், லால் கிஷன் அத்வானி காலகட்டத்தில் கூட அவர்கள் இருவருமே மிகப் பெரிய ஆளுமைகள் என்றாலுமே கூட, கட்சியின் கூட்டு முடிவுக்கு கட்டுப்பட்டவர்களாவும், ஆர்.எஸ்.எஸ் இன் வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறாதவர்களாகவுமே கடைசி வரை இருந்தனர். தனி நபர் செல்வாக்கு என்பதில்லாமல் அன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியில் ஏகப்பட்ட பெரிய ஆளுமைகள் கோலோச்சினர். முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, அருண் ஷோரி, உமாபாரதி, கோவிந்தாச்சாரி, சுஸ்மா சுவராஜ், உமாபாரதி, போன்ற எண்ணற்ற தலைவர்களிருந்தனர். அத்துடன் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பழைய ஜனதா கட்சி போன்ற வெளிக் கட்சியைச் சேர்ந்த மாபெரும் ஆளுமைகளையும் அனைத்துச் செல்லும் பண்பும் அன்றிருந்தது.

ஆனால், இந்திய அரசியல் என்பது எப்போதுமே தனி மனிதக் கவர்ச்சியில் ஆட்டுவிக்கப்படுவது. முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி என தேசிய அளவிலும் கு.காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, என்.டி.ராமாராவ், பி.ஜு.பட்நாயக், ஜெயலலிதா, பால்தாக்கரே என மாநில அளவிலும் தனிமனிதக் கவர்ச்சியில் கண்டுண்டு கிடக்கிறது. ஆகவே, நாமும் போதிய சுய அறிவில்லாத ஒரு தனி நபரை கண்டெடுத்து தலைவராக்கி, அவரை நம் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சியைக் கொண்டு செலுத்துவோம் என நம்பித் தான் நரேந்திர மோடியைக் குஜராத்தில் கண்டெடுத்து வளர்த்தனர்.

ஆனால், சுய அறிவாற்றலோ, செயல்திறனோ முற்றிலும் இல்லாதவரான பிரதமர் நரேந்திர மோடி அதிகாரம் அதிகரிக்க, அதிகரிக்க தாழ்வு மனப்பான்மை காரணமாக தன்னை பலசாலியாகக் காட்டிக் கொள்ள சுப்பிரியாரிட்டி காம்ப்ளஸுக்கு ஆளாகிப் போனார். அதன் விளைவு தான் அவர் லால் கிஷன் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி போன்ற சீனியர்களை ஓரம் கட்டினார். இந்த வரிசையில் கடைசியிலுள்ள மூவரும் நரேந்திர மோடியின் போதாமைகளை, முட்டாள் தனங்களை அதிகமாக பொது வெளியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தாலும், வெகுஜன ஊடகங்களின் பலத்தால் நரேந்திர மோடி தூக்கி நிறுத்தப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் ஆனது நரேந்திர மோடியின் இத்தகைய குணாதிசியங்களை விரும்பாவிடினும், ஹிந்து ராஷ்டிரா என்ற மிகப் பெரிய  நோக்கத்திற்காக நாம் சற்றே சகித்துக் கொள்வோம்.’என தொடர்ந்து நரேந்திர மோடியை பிரமோட் செய்தார்கள்! ஏனென்றால், ‘நரேந்திர மோடியும் நமக்காகத் தன் மனைவியை, சொந்தச் சகோதரர்களை, குடும்பத்தை துறந்தவர்’ என்பதும் ஆர்.எஸ்.எஸ் அனுசரணைக்கு ஒரு காரணமாகவேயிருந்தது.

எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் ஸின் அடிப்படை, எளிமையான வாழ்க்கை முறையாகும். எளிமை என்பதை பொது வாழ்வின் இலக்கணமாகத் தரித்துக் கொண்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால், அந்தப் பின்னணியிலிருந்து வந்த நரேந்திர மோடியோ, மிகப் பெரிய ஆடம்பர மோகியாகத் திகழ்கிறார். அவர் பயன்படுத்தும் அதி உயர்ந்த விலை கொண்ட விதவிதமான கார்கள், உடைகள், வாட்ச், ஷு போன்றவைகள் உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஸில் இருப்பவர்களை ஆரம்பத்தில் முகம் சுழிக்க வைத்துள்ளது. இதில் நரேந்திர மோடியின் பால்ய ஆண்டு கால நண்பரான பிரவீன் தொகாடியா (வி.ஹெச்.பி) நரேந்திர மோடியிடம் நேரடியாகவே தனது விமர்சனத்தை வைத்ததில் அவரை பெரிய விரோதியாக ஆக்கிவிட்டார் நரேந்திர மோடி!     பிரவீன் தொகாடியா கேட்டதெல்லாம் இது தான்; நீயும் நானும் ஒன்றாக பட்டிதொட்டியெல்லாம் சுற்றியுள்ளோம். என் ஸ்கூட்டர் பின்னால் உன்னை உட்கார வைத்து அஹமதாபாத்தில் வீதிவீதியாக வலம் வந்துள்ளேன். அன்றைக்குக் கிடைத்ததை உண்டு, போகுமிடங்களில் நண்பர்கள் இடங்களில் பாயை விரித்துப் படுத்துத் தூங்கி எழுந்து, அவர்கள் தருவதை வாங்கிச் சாப்பிட்டு பணியாற்றியுள்ளோம். ஆனால், இன்றைக்கு நீ அளவற்ற ஆடம்பரப் பிரியனாகி விட்டாய். நீ தேனீர் விற்றேன் என கதை விடுகிறாய்…வாயைத் திறந்தால் பொய்யா? என நட்பு அடிப்படையில் கிண்டல் செய்து சிரித்துள்ளார். இதற்கடுத்து ஒரு சில நாட்களில் பிரவீன் தொகாடியா கடுமையாகத் தாக்கப்பட்டார். ”இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் நரேந்திர மோடி இருக்கிறார்” என பகிரங்கமாகவே அவர் அறிவித்தார். அதையடுத்து அவரது பழைய வழக்குகளை தூசி தட்டி குஜராத் மாநில காவல்துறை அவரை என்கெளண்டர் செய்ய முயன்றதும், பிறகு அதை ஆர்.எஸ்.எஸ் தலையிட்டு தடுத்ததும் பழைய சம்பவங்கள்!

பால்ய கால நண்பர்கள்! கடும் பகைவர்களாயினர்!  இப்படியாக சொந்த இயக்கத்திலும் சகோதர இயக்கங்களிலும் அதிக விரோதிகளை உருவாக்கிக் கொண்ட நரேந்திர மோடி, தற்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மிகவும் அலட்சியப்படுத்த ஆரம்பித்த வகையில் பல கசப்பான சம்பவங்கள் இருதரப்பிலும் அரங்கேறியுள்ளன!

அதற்கு முக்கியக் காரணம், குஜராத் பனியாக்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் நரேந்திர மோடிக்குக் கொடுத்த அதி முக்கியத்துவமாகும். ‘தொழிலதிபர்களான தன் நண்பர்களால் தான் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன’ என்பதும், தன்னைக் கருதியே மக்கள் வாக்களிக்கிறார்கள்.’ என்பதுமான கர்வமே நரேந்திர மோடியை தன்னை ஆர்.எஸ்.எஸ் க்கு மேலானவராக எண்ண வைத்து விட்டது. அதாவது, அளப்பரிய செல்வக் குவியலும், அதிகாரக் குவியலும் அவரை தலை கீழாக மாற்றி, ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க வைத்துவிட்டன.

இதன் விளைவாக வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி. போன்ற சம காலத்தவர்களையும் கூட அவர் விலக்கி வைத்து விட்டார். பாரதிய ஜனதா கட்சியின்  முக்கியப் பொறுப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ் சின் சிபாரிசுகள் மட்டுமே அளவுகோலாக பார்க்கப்பட்ட நிலைமையை நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி முறியடித்து விட்டது. சத்தீஸ்கரில் இராமன்சிங்கை முதல்வராக்காமல் தவிர்த்தது, இராஜஸ்தானில் வசுந்தராராஜே சிந்தியாவை தவிர்த்தது, மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌகானைத் தவிர்த்தது போன்றவை சில உதாரணங்கள் என்றால், இந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிந்துரைத்த பலருக்கு பாரதிய ஜனதா கட்சி தொகுதிகளைத் தரவில்லை.

தங்களுக்குத் தலையாட்டக் கூடிய தலைவர்களையே மத்தியிலும், மாநிலங்களிலும் நியமித்துக் கொண்டது நரேந்திர மோடி-அமித்ஷா கூட்டணி! தற்போது ஜே.பி.நட்டா சமீபத்தில் தந்துள்ள பேட்டிகள், அறிக்கைகள் ஆகியவையே பாரதிய ஜனதா கட்சித் தலைமை, ஆர்.எஸ்.எஸ் சிடம் இருந்து விலகி நிற்க எத்தனிக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.

அதே போல தமிழ்நாட்டில் நரேந்திர மோடியின் தீவிர சீடராக தன்னை அறிவித்துக் கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடி பாணியிலேயே தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியிலுள்ள மூத்த தலைவர்களை, முன்னோடிகளை ஓரம் கட்டுவதில் வேகம் காட்டி வருகிறார் என்ற குற்றச்சாட்டும். சக கட்சித் தலைவர்களோடு முற்றிலும் இணக்கம் பாராட்ட மறுக்கிறார் என அண்ணாமலை மீது அதே கட்சியினர் வைத்த குற்றச்சாட்டுகளை அடுத்து கோயமுத்தூரில் ஒரு கல்யாண மண்டபத்தில் விசாரணை நடத்தியது ஆர்.எஸ்.எஸ். அதில் பலரும் ”தங்கள் பணியை அண்ணாமலை பயன்படுத்திக் கொள்ள மறுப்பதோடு, தங்களை முற்றிலும் தவிர்க்கிறார். தனக்கென ஒரு சிறிய குழுவை வைத்துக் கொண்டு அதனோடு மட்டுமே இயங்குகிறார்” எனப் பேசினார்கள். இது தொடர்பாக அண்ணாமலையிடம் இறுதியில் விளக்கம் கேட்ட போது, ”என் வொர்க்கிங் ஸ்டைலே வித்தியாசமானது. நான் இப்படித்தான் இருப்பேன். எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை யாரும் எனக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. எனக்கு நரேந்திர மோடிஜி மட்டுமே தலைவர். அவர் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவேன்” எனக் கூறியுள்ளார்.

இதே வகையில் தான் நரேந்திர மோடியும் உள்ளார். அதனால் தான் நரேந்திர மோடி-அமித்ஷா தவிர்த்து, தேர்தல் பிரச்சாரத்தில் கூட வேறு எந்த முக்கியத் தலைவர்களும் ஈடுபடவில்லை. தன் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் கூட தனக்கு இடமில்லை என்பது பாரதிய ஜனதா கட்சியின்  முக்கிய பல தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ் சிபாரிசு செய்தவர்களுக்கு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நிற்க தொகுதி ஒதுக்கீடு செய்து தரவில்லை. இதனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து விலகி நிற்கும் நிலை உருவாகிவிட்டது. வழக்கமாக அந்தந்த பூத்களுக்கான வாக்காளர் பட்டியலில் எடுத்து வீடுவீடாக ஓட்டு சிலிப்புகளை தருவார்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். ஆனால், அந்த சேவையை இந்த முறை நரேந்திர மோடி-அமித்ஷா தலைமை மறுதலித்து விட்டதானது ஆர்.எஸ்.எஸ் சுக்கு மிகப் பெரிய மனக் காயத்தை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மிகவும் பக்குவமானவர்கள். அவர்கள் தங்கள் கோபத்தை பொது வெளியில் ஒருபோதும் காட்டமாட்டார்கள். ஆனால், சிஸ்டமேட்டிக்காக செயல்பட்டு துரோகிகளைக் ‘களை’ எடுப்பதில் மிக வல்லவர்கள்! இந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியலில் நரேந்திர மோடி-அமித்ஷா இருவரும் மெல்ல,மெல்ல ஓரம் கட்டப்படுவார்கள். இதை சாத்தியமாக்கும் வண்ணமாகத் தான் தேர்தலுக்கு முன்பே சகலவிதத்திலும் திட்டங்களைத் தீட்டி அரங்கேற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்!

இந்த திட்டத்தின் அம்சமாகத் தான் முதல் கட்ட வாக்குப் பதிவிற்கு அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தோல்வி முகம் காண்கிறது என்ற பரலான கருத்தாக்கத்தை ஆர்.எஸ்.எஸ் ஆனாது சூட்சுமமாக மீடியாக்களில் கசிய விட்டது. நரேந்திர மோடி தப்பும், தவறுமாகப் பேசி அவமானப்படும் சூழலை அது தான் கூட இருப்பவர்களை வைத்து உருவாக்கித் தந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இது தான் உடனிருந்தே கருவறுக்கும் செயல். நரேந்திர மோடிக்கு சுய அறிவு கிடையாது என்பதையும், சுட்டுப் போட்டாலும் அவர் தனித்து தலைவராக முடியாது என்பதையும் ஆர்.எஸ்.எஸை விட அறிந்தவர் எவருமிலர்.

”நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் அரசியல் சட்டங்களை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் சையே அழித்து விடுவார், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் தப்ப முடியாது” என சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசி இருப்பது இங்கு கவனத்திற்கு உரியது. இதற்கு, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் கண்டணமோ, மறுப்போ தெரிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

எது எப்படியோ, உள் முரண்பாடுகளால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது தடுக்கப்பட்டுள்ளது என்பதே தற்போதைய களயதார்த்தம். ஜுன் மாதம் 4 ஆம் தேதிக்குப் பிறகு மறைந்திருக்கும் உண்மைகள் வெளி வந்தே தீரும்.

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும். தளர்ச்சி வந்த போது, மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும். என்பது வள்ளுவர் வாக்கு.  பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் தற்போது வெளிவரும் பலவிதமான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பிகளைக் குறித்து வைத்துக் கொள்வோம். 

நான்காம் தேதி என்ன நடக்கிறது என்பதையும், இவர்கள் பயன்படுத்திய தரவுகள் பற்றியும் அதன் உண்மைத் தன்மைகள் குறித்தும் விலாவாரியாக தெரியப்படுத்ததுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...