கோயமுத்தூரில் அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு பத்திரப்பதிவு முடியாமல் ரூபாய்.10 கோடி இழப்பீடு வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு பணியிடை நீக்கம் .
அவருடன் சிறப்புப் பிரிவு தாசில்தார் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவு. விமான நிலைய விரிவாக்கம் என்பது அவசியமாகும். அதற்கு கோயம்புத்தூர் விமான நிலையத்தை ஒட்டியுள்ள 644 ஏக்கர் நிலம் தேவைப்படுவதில் 461.90 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது..இந்த நிலத்தை 4 (1) அறிவிக்கை மூலம் கையகப்படுத்தும் பணியில் சிறப்புப் பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அனிதா தலைமையில் தாசில்தார் பர்சானா மற்றும் நில அளவையர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கையகப்படுத்தும் நில உரிமையாளர்களுக்கு குடியிருப்பு மனை நிலம் என்றால் ஒரு சதுர அடிக்கு ரூபாய்.1,500, விவசாய நஞ்சை அல்லது புஞ்சை நிலமென்றால் ஒரு சதுர அடிக்கு ரூபாய்.900 என இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது வழங்கப்பட்டது. விமான நிலையத்தை ஒட்டியுள்ள நில உரிமையாளர்களில் ஒருவர், தனது நிலத்தின் மதிப்பு அதிகம், அரசு நிர்ணயித்துள்ள தொகை மிகக் குறைவாக இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நில உரிமையாளர் கோரும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு அந்தத் தொகையை வழங்கினால் கையகப்படுத்தும் அனைத்து நில உரிமையாளர்களுக்கும் கூடுதலாக உள்ள தொகையை வழங்க வேண்டிய நிலை நேரிடும் என்பதால், அவருக்கு அத் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் நில உரிமையாளர், நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.அரசு பெயருக்கு நில உரிமையை மாற்றி, பத்திரப்பதிவு செய்யாமலேயே, உரிமையாளருக்கு ரூபாய்.10 கோடியை இழப்பீடாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது நிலத்தை பத்திரப்பதிவு செய்யாமலேயே இழப்பீடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அது குறித்து கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் விசாரணை நடத்தினார். அதில் தவறு நடந்தது உறுதியானதால், சிறப்புப் பிரிவைச் சேர்ந்த தாசில்தார் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மீதான குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து அனிதாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் பணியிலிருந்து அவர் ஓய்வு பெறும் நாளாகும். அதற்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊழல் செய்தால் தண்டனை தாமதம் ஆகும் என்பதால் தான் இது போன்ற தவறுகள் நடக்கிறது.
கருத்துகள்