தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக கே பெஜி ஜார்ஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்
தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக திரு கே பெஜி ஜார்ஜ் இன்று (03.06.2024) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வதற்கு முன், ரயில்வே வாரிய இயக்குநர் (திட்டமிடல்), இந்திய சரக்குப் பெட்டகக் கழகத்தின் மூத்தப் பொது மேலாளர், ரயில்வே தகவல் அமைப்புக்கான மையத்தின் பொது மேலாளர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
ரயில்வேத் துறையின் சிறப்புமிக்க பணிகளுக்காக கெளரவம் மிக்க ரயில்வே அமைச்சர் விருது, ரயில்வே வாரியம் மற்றும் பொது மேலாளர் விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
கருத்துகள்