நடிகர் விஜய், அரங்கமதிரும்படி மேடைக்கு வந்த பின் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்து உரையாடினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய், முதலில் சாதனை படைத்த பள்ளி மாணவ மாணவிகளுகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.12 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்றுச் சாதித்த மாணவிகளான, சென்னை மாவட்டம் கொளத்தூர் சட்ட மன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவி பிரதிக்ஷாவிற்கு வைரக்கம்மல் பரிசாக வழங்கினார், தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்ட மன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவி மகாலட்சுமிக்கு வைரக்கம்மலும். அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்ட மன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவி தொஷிதா லட்சுமிக்கு சால்வை அணிவித்து சான்றிதழுடன் வைரக்கம்மலும் வழங்கினார்
அடுத்தது 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்த, தர்மபுரி மாவட்டம் கரூர் சட்ட மன்றத் தொகுதி மாணவி சந்தியா, தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்ட மன்றத் தொகுதி மாணவி காவியாஸ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் சட்டமன்றத் தொகுதி மாணவி ஆர்.கோபிகா,
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி மாணவி காவியா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்ட மன்றத் தொகுதி மாணவி சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கும் வைரக்கம்மலை பரிசளித்தார் நடிகர் விஜய் உணவைக்கூட பட்டியல் போட்டு வெளியிட்டு விளம்பரம் தேட அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் முன் எச்சில் கையால் கூட காக்காய் விரட்டாத காரியக்காரர். தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சி துவங்கிய பின்னர் நடக்கும் விழா என்பதால் நடிகர் என்பதைக் கடந்து விழா நிகழ்வு பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
கருத்துகள்