ஜிஎன்எஸ்எஸ் தொழில்நுட்பம், வழிகாட்டுதல் மற்றும் நிலைப்படுத்தலை மேம்படுத்துகிறது, சுங்கச்சாவடி வசூல் முறைகளை நவீனமயமாக்குகிறது, தடையற்ற பயணத்தை உறுதி செய்கிறது மற்றும் நமது சாலைகளில் நெரிசலைக் குறைக்கிறது: திரு நிதின் கட்கரி
தேசிய நெடுஞ்சாலைகளில் சீரான மற்றும் தடையற்ற சுங்கச்சாவடி அனுபவத்தை வழங்குவதற்காக, இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஊக்குவிக்கப்பட்ட இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் லிமிடெட் (ஐ.ஹெச்.எம்.சி.எல்) புதுதில்லியில் 'குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (ஜி.என்.எஸ்.எஸ்) அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல்' குறித்து ஒரு நாள் சர்வதேச பயிலரங்கை ஏற்பாடு செய்தது. இந்தியாவில் ஜி.என்.எஸ்.எஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சுங்கவரி முறையை சீராக செயல்படுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்களை விவாதிக்க தொழில்துறை மற்றும் உலகளாவிய நிபுணர்களுக்கு சர்வதேச பயிலரங்கம் ஒரு தனித்துவமான தளத்தை வழங்கியது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். , மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு அஜய் தம்தா, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு அனுராக் ஜெயின், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சர்வதேச தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நிதின் கட்கரி, "ஜிஎன்எஸ்எஸ் தொழில்நுட்பம் வழிகாட்டுதல் மற்றும் நிலைப்படுத்தலை மேம்படுத்துகிறது, சுங்கச்சாவடி வசூல் முறைகளை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, தடையற்ற பயணத்தை உறுதி செய்கிறது. நமது சாலைகளில் நெரிசலைக் குறைக்கிறது. குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், நிர்வாகத்தை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கும், விரைவான சேவைகளை வழங்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்”, என்று கூறினார்.
கருத்துகள்