உள்ளாட்சி அமைப்புகளின் கணக்காளர்கள் பணிக்கு இணையவழிப் படிப்பு
உள்ளாட்சி அமைப்புகளின் வரவு செலவு கணக்குகளை பயிற்சி பெற்ற கணக்காளர்களைக் கொண்டு தரத்துடன் தயாரிக்கும் பொருட்டு, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியும் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமும் இணைந்து இணைய வழியிலான சான்றிதழ் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இதைக் கற்றுத் தேர்ச்சி பெற விரும்புவோர், திறனறித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று முக்கியத் தேர்வுக்குத் தகுதி பெற வேண்டும். முக்கியத்
தேர்வுக்கான பாடங்களைப் பயில இரண்டு மாத கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான மாணவர் சேர்க்கை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் கணக்காளர்களாகப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட சான்றிதழைப் பெறுவதற்கான இணைய வழிப் படிப்புக்கு http://iba.icaiarf.org.in எனும் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்
கருத்துகள்