விக்கிரவாண்டி சட்ட மன்றப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு: ஓர் அரசியல் பார்வை
விக்கிரவாண்டி சட்ட மன்றப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு
என்பதும் நாடகமாகவே காணும் நிலையில் அது ஒரு பொம்மலாட்டம் அல்லது பாவைக்கூத்து நூல் இருந்து ஆட்டுவிக்கும் இடம் வேறு.. அதை அறிவிக்கும் இடம் வேறு.. அவ்வளவே, என்பது தான் அரசியல் பார்வையாளர்கள் கருத்து. அரசியலில் ஒதுங்குவதும் ஓய்வெடுப்பதும் தற்கொலைக்குச் சமம்! - என சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் விமர்சனம் செய்துள்ளதில் உண்மை உண்டு.
எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையம் கே பழனிச்சாமி அதிமுகவை அழிப்பதற்காகத் தான் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சி அமமுக சொல்வதில் உண்மை இருக்கலாம்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மரணம், கொடநாடு எஸ்டேட் கொள்ளைகள் அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் நடத்திய கொலைகள் ஒரு சாதுர்யத்தால் மறைக்கவோ, அல்லது மறக்கடிக்கப்படுகின்றன. என சாமானிய மக்கள் பேசுகின்றனர். பாஜக சொல்லுது அதை பழனிச்சாமி செய்யுது !
இது நான்காண்டுகளாக பாஜக நடத்தி வரும் அரசியல் பலப்பரீட்சை என்பது அரசியல் அறிந்தவர்களுக்குப் புரியும் ! தேர்தலுக்கு முன்பே சறுக்கல்.
இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இந்த முறை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நிற்கிறது.
ஆனால் தமிழ்நாட்டிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக தான் எனச் சொல்லிக் கொள்ளும் அதிமுக, முக்கியத்துவம் வாய்ந்த சட்டமன்ற இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது.
வெற்றி பெறுவோமா என்ற சந்தேகத்தைத் தாண்டி இது எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்துமோ என்ற எண்ணம் எடப்பாடி கே. பழனிச்சாமியை அதிகமாகவே துளைத்தெடுக்கலாம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி அமைப்பதில் எடப்பாடி கே.பழனிச்சாமி கோட்டை விட்டுவிட்டார் என தற்போது உள்ள அதிருப்தி கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.
நாம் ஏற்கனவே பல தடவை சொல்லி இருக்கிறோம். ஒரு கட்சிக்கு எவ்வளவு வருஷம் வேண்டுமானாலும் ஒருவர் சிறப்பாக தலைமை யேற்று நடத்தலாம்.
ஆனால் அந்தக் கட்சியை தேர்தல் களத்தில் வெற்றி பெற வைப்பதில் தான் அவருடைய உண்மையான பங்கு மற்றும் செல்வாக்கு அடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கட்சி தொடங்கி நெடுங்காலமாக நடத்தி வரும் பலரும் இந்த இடத்தில் தான் சற்று சறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பல்லாண்டு காலம் ஆண்ட கட்சிக்குத் தலைமை பொறுப்பை வகிக்கும் எடப்பாடி கே பழனிச்சாமியின் சறுக்கல், மிகவும் வித்தியாசமாகவே உள்ளது..
எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாதது, திமுகவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியை வளர்த்து விடவே உதவப்போகிறது..
வட மாவட்டங்களில் வன்னியர் பகுதியில் செல்வாக்குப் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கியை, தனதாக்கிக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி இதனை திறம்படவே செய்யும்.
தேர்தலில் தான் சறுக்கல் என்றால் இந்த முறை........? இனி பல சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலையும் உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி ஏற்றுக் கொண்டபின் அவர் தலைமையில், முக்கிய கூட்டம் நடந்ததில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.
'நாடு முழுதும், ஒவ்வொரு அமைப்பின் கீழ், எத்தனை வழக்குகள் நிலுவையிலுள்ளது? அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
அனைத்து வழக்குகள் குறித்தும், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகிய மூன்றும் தனித்தனியாக ஒரு அட்டவணையை அமைச்சரிடம் கொடுத்த நிலையில், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த அனைத்து விபரங்களுமிருந்தன; தமிழ்நாட்டிலிருந்து, எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால்.
அனைத்தையும் பார்த்த பிறகு 'எந்த ஒரு வழக்கையும் தாமதம் செய்ய வேண்டாம்; அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடருங்கள்' என, உத்தரவிடப் பட்டதாகத் தகவல்.
நிதி அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் அமலாக்கத்துறை இருந்தாலும், FCRA படி வெளிநாட்டுப் பண விவகாரமிருந்தால், அதில் உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்டதென்பதால், அமலாக்கத்துறை இயக்குனர் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.
அரசியல் தொடர்பான வழக்குகளில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, போதைப் பொருள் விவகாரம், மணல் கடத்தல் என, அரசியல்வாதிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் இனி விசாரணை வேகமெடுக்கும். ஒரு சில அதிரடி சோதனைகளும் நடக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.
எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு திமுகக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி காலுன்ற முடியாது எனச் சொன்ன அனைவருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுக்கும்.
6 மாதங்களுக்கு முன்பு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 13 சதவீதம் வாக்குகள் மட்டும் எடுத்த பாரதிய ஜனதா கட்சி
இந்த பாராளுமன்றத் தேர்தலில் 35 சதவீதம் வாக்குகள் எடுக்குமென்று யாராவது நம்பினோமா?
தமிழ்நாட்டில் 3.5 சதவீதமாக எடுத்த பாரதிய ஜனதா கட்சி 12 சதவீதம் வாக்குகள் எடுக்குமென யாராவது நம்பினோமா? 12 சதவீதம் வாக்குகள் சாதாரணமானதல்ல
திமுகவுக்கு இது நேரடியாக விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்க முடியும்.
கருத்துகள்