திமுகவின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகக் கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவராக, பொருளாளர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைக் குழு துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் நியமனம்.
மக்களவைக் கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நியமனம்.
மாநிலங்களவைக் குழு தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா,
மாநிலங்களவைக் குழு துணைத்தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,
மாநிலங்களவை கொறடாவாக சட்டத் தலைமை ஆலோசகர் பி.வில்சன்,
இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்