முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குற்றவியல் நீதி பரிபாலன முறை சிறப்பாக இயங்க ஊழல் வழக்கில் நீதிபதி ஆலோசனை கலந்த உத்தரவு

தமிழ் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 5,557 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் இதில் 3,035 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 20 ஆண்டுகளில் 5,557 லஞ்ச வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல் தஞ்சாவூர் மாவட்டக் கல்வித் துறையில் RMSA திட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 2017-ஆம் ஆண்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உத்தரவிடக்கோரி மனுதாரர் குணசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் அமர்வில் தாக்கல் செய்த மனுவை   நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, 2017-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததற்கு நீதிபதி அதிருப்தி த

நித்தி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்து:

டில்லி நித்தி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்து: நதி நீர் இணைப்பு போன்றவை எல்லாம் outdated concept என்று தான் நினைக்க தோன்றுகிறது. மழை நன்றாகவே பெய்கிறது. ஆனால் சேமிப்பில் கோட்டை விட்டு விடுகிறோம். இந்தியாவின் பிரச்சினை பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தல் முறை உள்ளதை ஓரம் கட்டிவிட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளது போன்று அதிபர் தேர்தல் முறைகளைக் கொண்டு வந்து அரசியலுக்கு  வந்து "சேவை செய்யக்" காத்திருக்கும் தற்குறிகளை ஒழித்தாலே போதும், பல சீரிய பொருளாதார சமூக மேம்பாடுகளை கொண்டு வர முடியும். இந்த நாட்டின் மிகப் பெரிய முட்டுக் கட்டை ஒழுக்கமற்ற அரசியல் ஜனநாயகம் தான்.  செல்வக் குவிப்பைத் தீர்க்க 'பி4' மாதிரியை முதல்வர் சந்திரபாபு நாயுடு பரிந்துரைக்கிறார் ஆந்திர முதல்வர் வேலை உருவாக்கம் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். மேலும்  பொது-தனியார்-மக்கள் கூட்டாண்மையை (PPPs) குறிக்கும் 'பி4' மாதிரியை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தியா எதிர்கொள்ளும், அதிகரித்து வரும் செல்வச் செறிவு ( concentration of wealth )  குறி

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் காரணமாக திமுக பிரமுகர் நீக்கம்

 ரூபாய்.70 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த பிரமுகர் அக் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.  கைதான சையது இப்ராஹிம் என்ற நபரிடம் சென்னை புறநகர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கிய ரூபாய்.70 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த வழக்கில் கைதான சையது இப்ராஹிம் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கும் ஏற்கெனவே போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) சென்னை மண்டல இயக்குநர் பி.அரவிந்தன் தலைமையிலான குழுவினர் ஜூலை மாதம் 24-ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்த போது. அவர் கையில் வைத்திருந்த பையில் 5.970 கிலோ கிராம் எடைகொண்ட போதைப் பொருள்கள் இருந்ததைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அதை வைத்திருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த ப

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகள் பலத்த பாதிப்பு

பாறையைப் பிடித்து உயிருக்குப் போராடியவரைக் காப்பற்ற தீவிரமாக முயற்சி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கிராமத்தில், மிகப் பெரிய வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்தபடி ஒரு நபர் உயிருக்குப் போராடிய காட்சிகள் வெளியாகியது. அவரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்ததாகத் தகவல். நிலச்சரிவில் சிக்கிய முண்டக்கை நகர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் . காலை 7.30 மணியளவில் அப்பகுதியின் பரவியது கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ராகவன் கண்ணில் உயிருக்கு போராடிய அந்த நபர் சிக்க, இந்தச் சம்பவம் வெளிவந்தது. ஆற்றில் ஒரு பக்கம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மறுபக்கத்தில் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட பாறைகளுக்கு மத்தியில் ஒரு கால் மண்சரிவில் சிக்கியுள்ள அந்த நபரை யாரும் அணுக முடியவில்லை. அவரது நிலையை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பின , மீட்புக் குழுக்கள் அவரை மீட்க விரைந்தன. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை நகர் மற்றும் சூரல்மலா  பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு

19 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்

19 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப துறைகளில் 21 கோடி ரூபாய் மதிப்பில்லான  19 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் கீழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி, சந்தை மேம்பாடு, ஏற்றுமதி மேம்பாடு மற்றும் கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றையும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஆய்வு செய்தார். தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த ஆவணங்களை அறிமுகப்படுத்துதல், ஆய்வக உள்கட்டமைப்பு கொள்முதல் மற்றும் பல்வேறு பயன்பாட்டு பகுதிகளில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்காக 16 பொது மற்றும் 11 தனியார் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 27 விண்ணப்பங்களை மத்திய அமைச்சர் பரிசீலித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர் - ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பாரிஸ் ஒலிம்பிக் - 2024-ல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கமும் இதுவாகும். இதன் மூலம், கடந்த 20 ஆண்டுகளில் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (2004 ஏதென்ஸ்), அபினவ் பிந்த்ரா (2008 பெய்ஜிங்), விஜய் குமார் (2012 லண்டன்) மற்றும் ககன் நரங் (2012 லண்டன்) ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல்

பழங்குடியின சமூகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 200% அதிகரிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மேகாலயாவின் ஷில்லாங்கில் வர்த்தக சமூகம், இளைஞர்கள் - பெண்கள் பிரதிநிதிகளுடன் மத்திய பட்ஜெட் - 2024 குறித்த விவாதத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான பாதையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றார். இளைஞர்கள், பெண்கள், பழங்குடியின சமூகங்களை வளர்ச்சி அடையச் செய்வதன் மூலம் வடகிழக்குப் பிராந்தியத்தின் தொழில், வேளாண் துறைகளை மேம்படுத்துவதை இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். நாட்டின் வடகிழக்குப் பகுதி இந்த பட்ஜெட்டின் மூலம் அதிக பயனடைகிறது என்று திரு சோனோவால் கூறினார். பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த கூட்டத்தில் பேசிய திரு சர்பானந்தா சோனோவால், பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.13,000 கோ

பிரேசில் ஜி 20 தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் கூட்டம்

ஜி20 தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் கூட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் தடம் குறித்த உரையை இறுதி செய்தது பிரேசிலின் ஃபோர்டலேசாவில் கூடிய ஜி20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை  அமைச்சர்கள் 26 ஜூலை 2024 அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். பிரேசில் அதிபரின் கீழ் ஜூலை 25-26 தேதிகளில் இரண்டு நாள் நீடித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இறுதி உரை அங்கீகரிக்கப்பட்டது. மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். ஜி20 மாநாட்டில் பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன. இந்த நாடுகள் முன்பு தலைமை வகித்த, இப்போது தலைமை வகிக்கிற, அடுத்து தலைமை ஏற்கவுள்ள நாடுகளாகும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாக ஜூலை 23-24 தேதிகளில் 5 வது வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டம்  நடைபெற்றது. இந்த இரண்டு நாள் கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளான தொழிலாளர்

பிஐஎஸ் மேலாண்மை அமைப்பு சான்றளிப்புத் துறை தொழில் வல்லுநர் கூட்டம்

இந்திய தரநிர்ணய அமைவனத்தின் மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ் துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் உரிமதாரர் கூட்டம் கோவாவில் நடைபெற்றது இந்திய தரநிர்ணய அமைவனத்தின்  மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ் துறையின் , 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் உரிமதாரர் கூட்டம் கோவாவில் நடைபெற்றது. பிஐஎஸ் தெற்கு பிராந்திய அலுவலகத்தின் மேலாண்மை அமைப்பு சான்றளிப்புத் துறை  2024-2025 ஆம் ஆண்டிற்கான தனது முதல் உரிமம் பெறுபவர் சந்திப்பை தெற்கு கோவாவில் உள்ள போக்மல்லோ பீச் ரிசார்ட்டில் ஏற்பாடு செய்தது. தணிக்கைத் திட்டமிடல், மேலாண்மை அமைப்பு நன்மைகள் மற்றும் ஐஎஸ்ஓ தரநிலைகள் பற்றிய  முக்கியமான தலைப்புகளில் கவனம் செலுத்தி, செழுமைப்படுத்தும் அனுபவத்திற்காக இந்த நிகழ்வு தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்தது. துணை தலைமை இயக்குநர் விஞ்ஞானி திரு சந்தன் பாஹ்ல்,  தென் மண்டல துணை தலைமை இயக்குநர் விஞ்ஞானி  திரு ஸ்ரீ யு.எஸ்.பி யாதவ் உள்ளிட்ட உயரதிகாரிகள் , தணிக்கைகளின் செயல்பாட்டு திறன் மற்றும் இணக்கம் மற்றும் மேலாண்மை அமைப்பு தரங்களின் நன்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நுண்ணறிவு அமர்வுகளை வழங்கினர். பங்குதாரர்கள் தங்கள் சந்தேகங்க

பெங்களூர் ரயில் நிலையத்திற்கு நாய் இறைச்சிகள் பார்சல் மூலம் கொண்டு வரப்பட்டதா ஆய்வில் முடிவு தெரியவரும்

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நாய் இறைச்சிகள் பார்சல் மூலம் கொண்டு வந்து நகரம் முழுவதும் விற்கப்படுவதாக ஹிந்துத்துவா சமூக அமைப்புகளில் சில ஜூலை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புகாரளித்தன. ஜெய்ப்பூர் - மைசூரு விரைவு ரயில் மூலமாக இராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மேற்கண்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டிய நிலையில். கடந்த 12 ஆண்டுகளாக அந்தக் கடையில் நாய் இறைச்சி மட்டுமே விற்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் உணவு பழக்கம் அலுவலர்கள் நடத்திய சோதனையில், 90 பார்சல்கள் இரயிலிலிருந்து வந்திறக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.அதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறை ஆணையர் முழு விசாரணை நடத்த உத்தரவிட்டார். பெங்களூரில் நாய் கறி விற்றதாக வெளியான தகவல் பரவியதால் பரபரப்பானது. ரயில் நிலையத்தில் சுமார் 1,500 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பலருக்குத் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பெங்களூரு காவல்துறை இணைந்து கேஎஸ்ஆர் சிட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு நடைமேட

பிரதமர் தலைமையில் நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டம்

நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க வழிவகுக்கும்: பிரதமர் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை வளர்ந்த மாநிலங்கள் மூலம் நனவாக்க முடியும் என்று பிரதமர் கூறினார். வளர்ந்த பாரதம் @ 2047 ஐ நிறைவேற்ற ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும் தொலைநோக்கை உருவாக்க வேண்டும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலீட்டுக்கு உகந்த சாசனத்தை தயாரிக்குமாறு நிதி ஆயோக்கிற்கு பிரதமர் அறிவுறுத்தினார் நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த மாநில அளவில் நதி தொகுப்புகளை உருவாக்க பிரதமர் அறிவுறுத்தினார் எதிர்காலத்தில் மக்கள் தொகை மூப்படைதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள்தொகை மேலாண்மைத் திட்டங்களை தொடங்குமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார் வேலைவாய்ப்புக்கு தயார் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதை பிரதமர் வலியுறுத்தினார் வளர்ந்த பாரதத்தின் முன்னுரிமையாக வறுமை இல்லாத நிலையை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்: பிரதமர் இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 32,963 கனஅடியிலிருந்து 45,598 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 55.697 டி.எம்.சி.யாகவும். தொடர்ந்து நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது, மேலும் ஆடிப் பெருக்கு காரணமாக கூடுதல் நீர் திறக்கப்படும் மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் கூட்டுக் குடிநீர் திட்டம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர்  பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக சி.பி.இராதாகிருஷ்ணன் நியமனம்

ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சி.பி. இராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வானவர்.  பரேலி தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சந்தோஷ் கங்வார் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக அசாம் மாநிலத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . ராமன் தேகா நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும் பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தானின் மூத்த பாஜக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை இந்திய குடியரசுத்தலைவர்  ஏற்றுக்கொண்டார். 2. கீழ்க்கண்ட ஆளுநர்களை நியமிப்பதில் குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி அடைகிறார்:- (i) ஸ்ரீ ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார். (ii) தெலங்கானா ஆளுந