பிரதமரின் எக்ஸ் கணக்கைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியது
சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கணக்கைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்த சமூக ஊடகத் தளத்தில் அதிகம் பின்தொடரப்படும் உலகத் தலைவராக அவர் தொடர்கிறார்.
இது பற்றி எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"எக்ஸ் தளத்தில் நூறு மில்லியன் பின்தொடர்வோர்!
இந்தத் துடிப்பான ஊடகத்தில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன், விவாதம், நுண்ணறிவு, மக்களின் ஆசி, ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பலவற்றை ரசிக்கிறேன்.
எதிர்காலத்திலும் இதேபோன்ற ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன்.”
கருத்துகள்