2024 பாரீஸ் ஒலிம்பிக்கில்
பங்கேற்கும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் கலந்துரையாடினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாரீஸ் செல்லும் நமது குழுவினருடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள், தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணமும், வெற்றியும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.”
கருத்துகள்