2024, ஜூலை 15 நிலவரப்படி 96 ஆயிரத்து 980 பழைய வாகனங்கள் உடைக்கப்பட்டுள்ளன
2024, ஜூலை 15 நிலவரப்படி 96 ஆயிரத்து 980 பழைய வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட வாகன உடைப்பு மையங்கள் மூலம் உடைக்கப்பட்டிருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்ரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாகன உடைப்பு மையங்கள் 60-ம், தானியங்கி பரிசோதனை நிலையங்கள் 75-ம் செயல்படுவதாக தெரிவித்தார்.
21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் பழைய வாகனங்களுக்கு வரிவிலக்கு அறிவித்திருப்பதாகவும், பதிவு செய்யப்பட்ட வாகன உடைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் நிலுவை கடன்களை தள்ளுபடி செய்வதாக 18 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
2030-க்குள் சாலை விபத்துகளில் உயரிழப்புகள், காயமடைதலை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற ஸ்டாக்ஹோம் பிரகடனத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டு இருப்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்
கருத்துகள்