மாநில கடல்சார், நீர்வழிப் போக்குவரத்துக் குழுக் கூட்டத்தை மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்மின் பாதைகள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது
பல்வேறு மாநிலங்களில் உருவாக்கப்பட்ட மாநில கடல்சார் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக் குழுவின் மறுஆய்வை மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் காணொலிக் காட்சி மூலம் இன்று எடுத்துரைத்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு டி கே ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் கடல்வழி, நீர்வழிப் போக்குவரத்தின் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக சுமார் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திரு டி கே ராமச்சந்திரன் தமது தொடக்க உரையில், நீர்வழிப் போக்குவரத்துத் துறையை நிர்வகிப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் உள்ள அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "இன்றைய கூட்டம் நாட்டில் ஒரு வலுவான, நிலையான கடல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைப்பு குறித்த எங்கள் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கிறது என்றார்.
மாநிலம் சார்ந்த கடல் மற்றும் நீர்வழி போக்குவரத்து பெருந்திட்டங்களை தயாரித்தல், கடல்சார் துறை கொள்கைகளை உருவாக்குதல், பசுமை முன்முயற்சிகள், நீர்வழிகள் மேம்பாடு, கப்பல் சுற்றுலா, நகர்ப்புற நீர் போக்குவரத்து, கலங்கரை விளக்கங்கள் மேம்பாடு குறித்து இக்கூட்டம் கவனம் செலுத்தியது.
அந்தந்த மாநிலங்களில் இருந்து முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்த தலைமைச் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்களின் முயற்சிகளை திரு டி கே ராமச்சந்திரன் பாராட்டினார். “மாநிலங்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பும், செயலூக்கமும் கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. கடல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தின் மாறி வரும் திறனிலிருந்து ஒவ்வொரு பிராந்தியமும் பயனடைவதை உறுதி செய்து, 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் மாநில கடல்சார் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக் குழுக்களை நிறுவுவதே மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் குறிக்கோள்" என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்