விழுப்புரத்தில் வருமானவரிப் பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கம்- 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
சென்னை வருமானவரித்துறை தலைமை ஆணையரகத்தின் (வரிப்பிடித்தம்), திரு எல் ராஜசேகர ரெட்டி அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் , சென்னை கருவூல ஆணையரகம், சென்னை, தமிழ்நாடு அரசின் வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி, தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வருகின்ற அனைவருக்கும் வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வகையில், திரு எம் முரளி,IRS , ஆணையர் (வரிப்பிடித்தம் ), சென்னை மற்றும் திரு M அர்ஜுன் மாணிக் , கூடுதல் ஆணையர் , வருமானவரி சரகம் -3, சென்னை ஆகியோரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நேற்று (16-07-2024 செவ்வாய்க்கிழமை) செவ்வாய் கிழமை , விழுப்புரம் சட்ட கல்லூரி வளாகத்தில் , விழுப்புரம் மாவட்டதின் கீழ் வருகின்ற தமிழ்நாடு அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி வருமானவரிப்பிடித்தம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தில் , மாவட்ட கருவூல அலுவலர் திரு ராமச்சந்திரன் , தலைமை ஏற்று வரவேற்புரை வழங்கினார். விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் கிருஷ்ண லீலா சிறப்புரை ஆற்றினார்.
வருமானவரி அலுவலர்கள் திரு செங்குட்டுவன், திரு செந்தில் குமார், திரு ராஜாராமன் மற்றும் திரு தீபன் குமார் ஆகியோர், வருமானவரிப்பிடித்தம் குறித்த பல்வேறு விதிகளின் அடிப்படையில் முறையாக வரிப்பிடித்தம் செய்வது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், மேலும்,வரிபிடித்த விதிகளை முறையாக பின்பற்ற வில்லை என்றால் எழும் சிக்கல்கள் போன்றவை குறித்து தெளிவாக விளக்கினார்.
வருமான வரி அதிகாரிகள் திரு சிற்றரரசன் , திரு தயாநிதி , INCOMETAX -TRACES தளம் குறித்து விளக்கினார்.
வரிப்பிடித்தம் குறித்த துண்டு பிரசுரம், கையேடு (கணினி வழி பிரதி) அனைவருக்கும் பகிரப்பட்டது. மேலும், INCOMETAX -TRACES தளம் குறித்து தமிழ் மொழியில் 16 தலைப்புகளில் காணொலிகள் , வருமானவரித்துறையின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் வரிப்பிடித்தம் செய்பவர்களின் பயன்பாட்டுக்கு உள்ளது என்பது எடுத்துரைக்கப்பட்டது. மேலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிடிஎஸ் -நண்பன் என்ற சேட்போட் , ப்ளேஸ்டோர் மூலமாக பயன்பாட்டில் உள்ளது என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கத்தில் 400 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்..
கருத்துகள்