தமிழ்நாடு மின்சார வாரியம் TANGEDCO இரண்டாகப் பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்ததையடுத்து TANGEDCO இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது,
அதில் ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும்,
மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும். கடந்த காலத்தில் மின்சாரத்துறையில் மூவாயிரம் கோடி ரூபாய் ஊழல் இந்த ஊழலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஊழல் செய்துள்ளார்கள் என ஆதாரப்பூர்வமான புகார்கள் நிலுவையில் உள்ளது இதில் அதானி குரூப் நிறுவனம் மோசடி செய்துள்ளது. என்பது சிறப்புத் தகவல் ஆகவே விசாரணை சரியாக நடக்கவில்லை என்பது பலரும் அறியாத உண்மை. தமிழ்நாடு மின்சார வாரியம் 1957-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1-ஆம் தேதி மின்சாரம் வழங்கல் சட்டம் 1948 பிரிவு 54-ன் படி தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிறுவனமாக இதுவரை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்