பதவி இறக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் அரசு அலுவலர்கள் குறித்து மனு.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு கடைபிடித்துவந்த ரோஸ்டர் முறையை எதிர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சார்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு காரணமாக
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு அலுவலர்களின் பணிஉயர்வைப் பறித்து அவர்களை பணியில் கீழிறக்கம் செய்தது. தமிழ்நாடு அரசு. இதைத் தடுப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதைப் போல சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கடந்த ஆண்டு இதே நாளில் அமைச்சர் கயல்விழியிடம் மனு
அளித்தனர். ஆனால் அந்த மனு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இதுவரை நடவடிக்கைகள் எடுக்க இயலாத சட்டச் சிக்கல் உள்ளது அதனால் இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
திருமாவளவன் சார்ந்த கட்சி சார்பில் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடத்தில் அதுகுறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவாக எடுத்துரைத்த நிலையில் வேளாண்மைத் துறையில் 39 துணை இயக்குநர்கள் பதவி இறக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் அதில் 37 பேர் ஆதிதிராவிட வகுப்பினர் என்றும் . இப்படியே போனால் இனிமேல் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாது. எனவும் இதைத் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாதா? எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்தார் விழுப்புரத்தில் அமைச்சரிடம் மனு அளித்தனர்.
கருத்துகள்