மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ராஜ்குமார். மனைவி மைதிலி ராஜலட்சுமி.
இவர்களுடைய மகன், மதுரையிலுள்ள தனியார் பள்ளியில்பயின்று வரும் நிலையில் பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் போது ஜூலை மாதம் 11-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி ஆகியோரை பயங்கர ஆயுதங்களைக் காட்டிக் கடத்தி சென்ற கும்பலைச் சே்ாந்தவர்கள், மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து ரூபாய்.2 கோடி தர வேண்டுமெனவும் மிரட்டினர். அதுதொடர்பாக மைதிலி ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய 3 மணி நேரத்தில் சிறுவன், மற்றும் ஆட்டோ ஓட்டுனரையும் மீட்டனர்.
நான்கு பேரைக் கைது செய்திருந்த நிலையில் தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக கருதப்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் மனைவி சூர்யா என்பவரை காவல்துறையினர் ரகசியமாகத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அவர் குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் இல்லத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக அந்தப் பெண்ணின் தாயார் தகவல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் காந்திநகரில் இன்று காலை மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் மனைவி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில். 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் காலை 8:30 மணியளவில் ஆபத்தான நிலையில் காந்திநகர் சிவில் மருத்துவமனையின் ICU வார்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்சித் தன்வரிடமிருநது பிரிந்த மனைவி சூர்யா பென் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். செக்டார்-19 ல் உள்ள அவர்களது இல்லத்திலிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலையை சீராக்க மருத்துவர் கள் தீவிர சிகிச்சையளித்தனர்.
சூர்யாபென் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதையும், ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செக்டர்-21 காவல் நிலையத்தின் மூத்த பிஐ விஆர் கேர் உறுதிப்படுத்தினார். முதற்கட்டத் தகவலில், அவர் விஷப் பொருளை உட்கொண்டதாகத் தெரியவருகிறது, மேலும் அவரது வாக்குமூலத்தைப் பதிவுசெய்து தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் அவர் குணமடையக் காத்திருந்னர்.
ரஞ்சித் தன்வர் அங்கு குழந்தைகளுடன் தனியாக வசிப்பதாகவும், அவரது மனைவி மதுரையில் தங்கியிருப்பதாகவும் தெரிந்தது. சூர்யாபெனின் செயல்களுக்கான சரியான காரணம் தெரியவில்லை, மேலும் அவர் அதிகாரிகளுக்கு அளித்த அறிக்கையைத் தொடர்ந்து தற்போது தற்கொலை செய்து இறந்தது உறுதியானது. இனி விசாரணையில் முழு விவரம் தெரியவரும்
கருத்துகள்