மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"புனித ரத யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு எனது வாழ்த்துகள். மஹாபிரபு ஜெகன்நாதரை வணங்கி, அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்க பிரார்த்திக்கிறேன். எனத் தெரிவித்தார் மேலும். "பூரியில் நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரை திருவிழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
ஒடிசாவின் புனித நகரமான பூரியில் இன்று (ஜூலை 7, 2024) நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரை திருவிழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தமது அனுபவத்தைப் பற்றி கூறியிருப்பதாவது:
"ஜெய் ஜெகந்நாத்! பூரியில் இன்று நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது பகவான் பாலபத்திரர், தேவி சுபத்ரா, மகாபிரபு ஸ்ரீ ஜெகந்நாதர் ஆகியோரின் மூன்று ரதங்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்படுவதைக் தரிசித்தது, ஆழ்ந்த தெய்வீக அனுபவமாகும். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மீக நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று, இந்தப் புனித ஸ்தலத்தில் திரண்டிருந்த பக்தர்களுடன் ஒன்றிணைந்ததாக உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, பரம்பொருளின் இருப்பை நமக்கு உணர்த்தும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்களில் இதுவும் ஒன்றாகும். மகாபிரபு ஜெகந்நாதரின் அருளால் உலகெங்கும் அமைதியும் வளமும் நிலவட்டும்!"
கருத்துகள்