இனிமேல் வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் தான் சேமிக்கலாமென மத்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிட்டது.
இன்று நாட்டிலுள்ள அனைவருக்கும் வங்கி சேமிப்புக் கணக்குள்ளது, இன்று நடைமுறையில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கும் அதில் பணம் வைத்திருப்பது அவசியம், ஆனால் சேமிப்புக் கணக்குகளிலும் உள்ளது உச்ச வரம்பு. அதைத் தாண்டிச் செல்வது தீங்காகும், சமீபத்தில் வருமான வரித் துறை சேமிப்புக் கணக்கு தொடர்பான சில புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
இந்தியாவில் சேமிப்புக் கணக்கை புதிதாகத் திறப்பதில் எந்தத் தடையுமில்லை என்பதால் பலர் பல கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இந்த கணக்குகள் பணத்தை சேமிக்க பாதுகாப்பான இடத்தை வழங்குகின்றன,வங்கிகள் சேமிப்பு செய்த தொகைக்கு வட்டி வழங்கும். எவ்வாறாயினும், அபராதக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு, ஜீரோ பேலன்ஸ் கணக்குகளைத் தவிர்த்து, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பதும் தற்போது அவசியம்.
ரூபாய் 50,000 அல்லது அதற்கு மேல் சேமிப்பு செய்யும் போது உங்களின் நிரந்தரமான வருமான வரிக் கணக்கு எண்ணை PAN (நிரந்தரக் கணக்கு எண்) வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை பணம் சேமிப்பு செய்யலாம்.
வழக்கமான ரொக்க சேமிப்பு செய்யாதவர்கள் பான் எண் இல்லாமல் ரூபாய்.2.50 லட்சம் வரை சேமிப்பு செய்யலாம்.
வரி செலுத்துவோர் அனைத்துக் கணக்குகளிலும் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூபாய்.10 லட்சம் வரை ரொக்கமாக சேமிப்பு செய்யலாம்.
ஒரு நிதியாண்டில் ரூபாய்.10 லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்கள் வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கில் இவ்வளவு பெரிய சேமிப்புகளுக்கு வருமான வரி துறையில் திருப்திகரமான விளக்கத்தை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் இனிமேல் அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் வரி அலுழலர்களால் ஆய்வு செய்யப்படலாம்.இனி ஒரு நாளில் ரூபாய் 5000 முதல் ரூபாய் 25000 தான் அளவு! பணம் அனுப்ப புதிய விதிமுறைகள்.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் பல உள்ளன இந்தியா தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. முன்பு வங்கிக்குச் சென்று கால்கடுக்க நின்று சலான் சமர்ப்பித்து பணம் அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. தற்பொழுது வங்கிக்குச் செல்வதைத் தவிர்த்து டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்கின்றோம். ஆனால் சிலர் இன்றும் வங்கிக் கிளைகள் மூலம் பணம் அனுப்பி வருகின்ற நிலையில் இவ்வாறு பணம் அனுப்புவதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத ஒருவர் பிறருக்கு ஒரு முறைக்கு ரூபாய்.5,000 மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாடும். அதேபோல் நபர் ஒருவருக்கு ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூபாய்.25,000 மட்டுமே அனுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாதவர் வழங்கிய பணத்தின் பதிவுகளை அனைத்து வங்கிகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டுப் பணப் பரிவர்த்தனை தொடர்பான 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட விதிகளைத் திருத்தி வரும் நவம்பர் மாதம் 01 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த விதிகளின் படி கணக்கில்லாதவர்கள் வங்கியில் செலுத்திய பணம் தொடர்பான விவரம், பணம் பெற்றவரின் பெயர் மற்றும் அவரது முகவரி உள்ளிட்ட விவரங்களை வங்கிகள் பாதுகாக்க வேண்டுமென அணைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்