திருச்சிராப்பள்ளியில் இலவசப் பட்டாணி கேட்டு கடையில் தகராறு செய்த காவல்துறையின் சிறப்பு சார்பு ஆய்வாளர் செய்த தவறுக்கு நியாயமாகப் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாநகர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணியாற்றியவர் இராதா, இவா் திங்கட்கிழமை அதே பகுதியிலுள்ள ஒரு பிரபலமான கடலைக் கடைக்குச் சென்று பட்டாணி கேட்டுள்ளார். எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமென கடையிலுள்ள ராஜன் என்ற நபர் கேட்ட போது, பணமெல்லாம் தர முடியாது. யூனிஃபார்மிலுள்ள போலீசிடமே பணம் கேட்கிறாயா? எனக் கோபமாகக் கேட்டுள்ளார், இதனால் கடை உரிமையாளருக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர் இராதாவுக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் விடாப்பிடியாக வற்புறுத்தி இலவசமாகவே பட்டாணியை கேட்டு பெற்றுச் சென்றுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் காணொளிக் காட்சி பரவியது குறித்து விசாரணை நடத்திய திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையா் காமினி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளா் இராதாவை பணியிடை நீக்கம் செய்து மறுநாள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடைக்காரரிடம் இலவசமாக பட்டாணி வாங்கியது அரசு ஊழியர் செய்த குற்றத்திற்கு இனி விசாரணை நடவடிக்கை வரும்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்