சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே ஆர் ஸ்ரீராமை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான டி ஒய் சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் வி கங்காபூர்வாலா 2024 மே மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியான ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டதன் படி 2024 மே மாதம் 24 ஆம் தேதியிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் பதவி வகித்தார்
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து கொலிஜியம் பரிந்துரை செய்ததையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்தது.
2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி, நீதிபதி கே ஆர்ஸ்ரீராம் மும்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக பதவியேற்றார். நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் நல்ல அனுபவமுள்ள கே ஆர் ஸ்ரீராம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் கோவா பார் கவுன்சிலில் ஜூலை மாதம் 3 ஆம் தேதி 1986 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். பின்னர் வணிக விவகாரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராவார். அதே போல உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையில் நடந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கருத்துகள்