இராணுவ மருத்துவமனையின் (ஆராய்ச்சி & பரிந்துரை) கமாண்டண்டாக லெப்டினென்ட் ஜெனரல் சங்கர் நாராயண் பொறுப்பேற்பு
இராணுவ மருத்துவமனையின் (ஆராய்ச்சி & பரிந்துரை) கமாண்டண்டாக லெப்டினென்ட் ஜெனரல் சங்கர் நாராயண் பொறுப்பேற்றார்
ராணுவ மருத்துவ சேவைகளின் உயர்நிலை மருத்தவமனையான ராணுவ மருத்துவமனையின் (ஆராய்ச்சி & பரிந்துரை) கமாண்டண்டாக லெப்டினென்ட் ஜெனரல் சங்கர் நாராயண் 2024, ஜூலை 10 அன்று பொறுப்பேற்றார்.
புனேயில் உள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியின் 1982-ம் ஆண்டு தொகுப்பின் முன்னாள் மாணவரான இவர், குழந்தை மருத்துவத்தில் சிறப்பு கல்வி கற்றவர். மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பை புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பயின்ற இவர், லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பயிற்சி பெற்றவர்.
கருத்துகள்