மத்திய அரசாங்கம் வெவ்வேறு அமைச்சரவைக் குழுக்களை அமைக்கிறது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11 உறுப்பினர்கள் இருப்பார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், எஃகுத் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைக்கப்படும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
ராஜ்நாத் சிங் தலைமையில் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அமைக்கப்படும். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் உட்பட 14 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
அமைச்சரவையின் நியமனக் குழு திரு நரேந்திர மோடி மற்றும் திரு அமித்ஷா ஆகியோரைக் கொண்டுள்ளது. மற்ற அமைச்சரவைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்