குவாண்டம் தரநிலைப்படுத்தலுக்கும் சோதனை ஆய்வகங்களுக்குமான முன்மொழிவுகளை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வரவேற்கிறது
"குவாண்டம் தரநிலைப்படுத்தலுக்கும் சோதனை ஆய்வகங்களுக்குமான" முன்மொழிவுகளுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் குவாண்டம் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதாகும். இது குவாண்டம் தகவல்தொடர்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இந்த ஆய்வகங்கள் கண்டுபிடிப்பு மையங்களாக செயல்படும். குவாண்டம் தொழில்நுட்ப வல்லுநர்கள், சோதனை உபகரண உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து, மக்களின் நலனுக்காக குவாண்டம் தொழில்நுட்பங்களின் முழு திறனையும் ஆராய்ந்து பயன்படுத்தும் வகையில் இந்த ஆய்வகங்கள் அமையும்.
முன்மொழிவுகளை சமர்ப்பிக்க 2024, ஆகஸ்ட் 05 கடைசி நாளாகும். இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு, https://dot.gov.in அல்லது https://ttdf.usof.gov.in என்ற இணையதளங்களை அணுகலாம்.
கருத்துகள்