போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலையில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை
அங்கீகரிக்கப்படாத பேக்கேஜூடன் குடிநீர் உற்பத்தி ஆலை கும்மிடிப்பூண்டி பாப்பம் குப்பம் கிராமத்தில் ஹிமா அக்வா மினரல்ஸ் என்ற பெயரில் இயங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து, 2024, ஜூலை 03 அன்று இந்திய தர அமைவனத்தின் (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, சோதனை நடத்தியது.
சோதனையின் போது போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடன் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் நிரப்பப்பட்ட 8,640 எண்ணிக்கையிலான 1 லிட்டர் பாட்டில்கள், 558 எண்ணிக்கையிலான 2 லிட்டர் பாட்டில்கள், 12,288 எண்ணிக்கையிலான 500 மில்லி அளவிலான பாட்டில்கள், 3,600 எண்ணிக்கையிலான 300 மில்லி பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன், சுமார் 10,000 எண்ணிக்கையிலான போலியான ஐஎஸ்ஐ முத்திரை பொறிக்கப்பட்ட லேபிள்களும் கைப்பற்றப்பட்டன. உற்பத்தியாளர் "ஹிமா" மற்றும் "சூப்பர்" என்ற பிராண்ட் பெயர்களில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இந்த நிறுவனம் பிஎஸ்ஐ உரிமத்தை பெறாமல். பிஎஸ்ஐ சட்டம் 2016-ன் பிரிவு 16 மற்றும் பிரிவு 17 ஐ மீறியுள்ளது கண்டறியப்பட்டதன் மூலம் குற்றவாளிகள் மீது இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016-ன் கீழ் பிஐஎஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கிளை அலுவலகத் தலைவர் திருமதி ஜி பவானி தெரிவித்தார். இந்தக் குற்றத்திற்கு, முதல் மீறலுக்கு பிஎஸ்ஐ சட்டம், 2016-ன் பிரிவு 29 -ன் படி, 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2,00,000 /-க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அல்லது பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே, பொது மக்கள், எவரேனும் இது போன்ற தகவல் தெரிந்தால், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) ஆகியவை மூலம் பிஐஎஸ் பற்றிய பொதுவான தகவல்களை அறியலாம்.
கருத்துகள்