முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழிக்குப் பழியாக படுகொலையான ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

பழிக்குப் பழியாகப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்


உடலைப் பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை  அவசர வழக்காக நேற்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதியளிக்க வேண்டிய மனு தாக்கல் செய்தார் அதன் தீர்வு விபரங்கள்: 


நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் வழக்கு விசாரணை. நடப்பதாக இருந்தது மாற்றம் ஆனது வேறு நீதிபதி நடத்திய விசாரணையில் பரிசீலிக்கப்பட்ட விபரங்களில் சொந்த நிலத்தில் புதைக்கணும்னா, வருவாய்த்துறை அனுமதி அளிக்க வேண்டும். மாநகராட்சியும் அதை இடுகாடாக அறிவிக்கணும். குடியிருப்புப் பகுதியில் ஒரு இடத்தை இடுகாடாக அறிவிக்க சுற்றியுள்ள வசிப்பவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. முன்னாள் தமிழ்நாடு மாநில முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியை அடக்கம் செய்யும் வழக்கில் ஏற்கனவே மெரினா அண்ணா நினைவகம் வளாகம் இடுகாடாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டே நீதிமன்றம் அனுமதி வழங்கியது.




இங்கே புரட்சி பேசும் எத்தனை பேர் வீட்டுக்குப் பக்கத்தில் சமாதி அமைய ஒத்துக் கொள்வார்கள்? அதனால் ஏற்படக்கூடிய கூட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, நில மதிப்பிழப்புன்னு நிறைய ஆட்சேபணைகள் எழக்கூடுமே என்பதால் பொது நலனைக் கருத்தில் கொண்டு முறையாக ஆய்வு செய்து தான் அரசும் அனுமதி கொடுக்க முடியும். 


சொந்த விவகாரத்தில் நாளைக்கே ஒருவர் இறந்து போனால் பெசண்ட் நகரில் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிக் கொடுங்கள்  புதைக்கறேன்னு கேட்டால் தமிழ்நாடு அரசு உடனே ஒத்துக்க முடியுமா? பெரம்பூர்ல 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் BSP சார்பில் ஆம்ஸ்ட்ராங் போட்டியிட்டு வாங்குய மொத்த வாக்குகள் 515.




இன்று போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துகிறவர்கள், அரசியல் ஆசான்னு பதிவுகள் செய்து கூடிய கூட்டம் ஓட்டுப் போட்டிருந்தால் அவர் வெற்றி பெற்று வந்திருக்கலாம்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக படுகொலை செய்யப்பட்டார் இது அரசியல் கொலை அல்ல, என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது   இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என அவருடைய மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் , பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் குறுகிய பகுதி, குடியிருப்புகள் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் ஆம்ஸ்ட்ராங் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.


சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நிலம் கொடுக்க மனம் உள்ளது, ஆனால் விதிமுறையை பின்பற்ற வேண்டுமே. ஆம்ஸ்ட்ராங் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் மணி மண்டபம் கட்டுவார்கள். அந்த இடத்தில் வீரவணக்கம் செலுத்த அவருடைய ஆதரவாளர்கள் புறப்பட்டால் அந்த குறுகிய இடத்தில் நெரிசல் ஏற்படும் என தனது வாதத்தில் தெரிவித்தது.

அப்போது நீதிபதி கூறுகையில், வீரவணக்கம் செலுத்தும் போது இடநெருக்கடியால் உங்களுக்குத்தான் செய்ய முடியாமல் போகும். எனவே வேறு இடம் பார்த்து சொல்லுங்கள் என்று கூறி வழக்கை ஒரு மணி நேரத்திற்கு தள்ளி வைத்தார். அப்போது மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் விஜயகாந்துக்கு வழங்கியதை போல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடம் வழங்க வேண்டும் என்றார். அதற்கு தமிழக அரசு தரப்பு, விஜயகாந்தின் கல்யாண மண்டபம் 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. அங்கு குடியிருப்புகள் ஏதும் இல்லை. சாலையும் அகன்றதாக உள்ளதால் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.



ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். அவரது உடலை நல்லடக்கம் செய்ய 200 சதுர அடி இடத்தை தர அரசு தயார். அதுவும் பெரம்பூரிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் கொடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அப்போது மனுதாரரோ, பெரம்பூரிலேயே 7500 சதுர அடியில் இடம் கொடுங்கள் என கேட்டனர் 




இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பவானி சுப்புராயன், "விஜயகாந்திற்கு கொடுத்தது போல் சலுகை கொடுக்க தயார். ஆனால் அதற்கான இடத்தை நீங்கள் தான் காட்ட வேண்டும். குடியிருப்பு இருக்கும் இடத்தில் நல்லடக்கம் செய்யக் கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும். மேலும் உடலை பள்ளியிலேயே வைத்திருக்க முடியாது. நாளை பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும்.


இன்று மாலையே அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் முன்பு அமர்ந்து அவரது மனைவி எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. அவரும் இந்த துக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும். நீதிமன்றம் எல்லையை தாண்ட முடியாது என தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை மதியம் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தார் . பின்னர் வழங்கிய தீர்ப்பில்......மனு தீர்வாகாது. பழிக்குப்பழியாக படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலைப் பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை  அவசர வழக்காக நேற்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதியளிக்க நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் வழக்கு விசாரணை. சொந்த நிலத்தில் புதைக்கணும்னா, வருவாய்த்துறை அனுமதி அளிக்க வேண்டும். மாநகராட்சியும் அதை இடுகாடாக அறிவிக்கணும். குடியிருப்புப் பகுதியில் ஒரு இடத்தை இடுகாடாக அறிவிக்க சுற்றியுள்ள வசிப்பவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. முன்னாள் தமிழ்நாடு மாநில முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியை அடக்கம் செய்யும் வழக்கில் ஏற்கனவே மெரினா அண்ணா நினைவகம் வளாகம் இடுகாடாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டே நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இங்கே புரட்சி பேசும் எத்தனை பேர் வீட்டுக்குப் பக்கத்தில் சமாதி அமைய ஒத்துக் கொள்வார்கள்? அதனால் ஏற்படக்கூடிய கூட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, நில மதிப்பிழப்புன்னு நிறைய ஆட்சேபணைகள் எழக்கூடுமே என்பதால் பொது நலனைக் கருத்தில் கொண்டு முறையாக ஆய்வு செய்து தான் அரசும் அனுமதி கொடுக்க முடியும். 



சொந்த விவகாரத்தில் நாளைக்கே ஒருவர் இறந்து போனால் பெசண்ட் நகரில் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிக் கொடுங்கள்  புதைக்கறேன்னு கேட்டால் தமிழ்நாடு அரசு உடனே ஒத்துக்க முடியுமா? பெரம்பூர்ல 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் BSP சார்பில் ஆம்ஸ்ட்ராங் போட்டியிட்டு வாங்கிய மொத்த வாக்குகள் 515.

இன்று போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துகிறவர்கள், அரசியல் ஆசான்னு பதிவுகள் செய்து கூடிய கூட்டம் ஓட்டுப் போட்டிருந்தால் அவர் வெற்றி பெற்று வந்திருக்கலாம். நீதியரசர் திருமதி அனிதா சுமந்த் தானே விசாரிப்பதாக கூறினார்கள்? ஆனால் நீதிபதி பவானி சுப்புராயன் விசாரணை நடத்த நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங்கின்  உடல் வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்களா?”  என்றால் இல்லை என்றே காண்கிறோம் அதில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அஞ்சலி முடித்து பேசியது இது : "நம் மண்ணில் நம் மண்ணின் மகனுக்கு நடந்த கொடுமையை நாமே விசாரித்தால் தான் சரியாக இருக்கும்.. ” தொட்டதுக்கெல்லாம் CBI எதற்கு..? நம்மிடம் ஆகச்சிறந்த காவல்துறை, சிபிசிஐடி உண்டு.. இது தான் அரசியல் திடீரென தமிழக அரசுக்கு ஆதரவாக பேசிய சீமான், காரணம் இல்லாமல் இருக்காது, ஒரு முன் தரவை இங்கு காணலாம்; 


தென்னரசுக்கும், கூலிப்படை தலைவனான ஆற்காடு சுரேஷுக்கும் யார் பெரிய ரௌடி என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டு, ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட போது, தென்னரசுக்கு பாதுகாவலராக பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோர் இருந்துள்ளனர்.

அவர்கள் மீது, ஆற்காடு சுரேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. தன்னை வளரவிடாமல் செய்யும் தென்னரசு, ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாம் சரவணன் ஆகியோரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.



2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியில் திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே, ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள் சேர்ந்து, தென்னரசைக் கொலை செய்து கதையை முடித்தனர். இது ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாம் சரவணனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதையடுத்து, ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் கால் வைக்க முடியாதபடி செய்தனர். என்பது கடந்த கால உண்மை நிலை,    ஆருத்ரா கோல்ட் வழக்கில் அண்ணாமலை-அமர்பிரசாத் ரெட்டிக்கு வலதுகரமாக செயல்பட்ட ஆற்காடு சுரேஷ் வெட்டிக்கொள்ளப்பட பழிக்கு பழியாக ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்த சுரேஷின் தம்பி.  ஏர்போர்ட் தங்ககடத்தல் கும்பல்-ஆருத்ரா அதன் காரணமாக ஒரு முக்கிய தலைவர் லண்டன் பயணம்-ஆற்காடு பாலு-ஆர்ம்ஸ்ட்ராங். இதில் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில்  இங்கிலாந்து நாட்டில் நடப்பது தான் இந்திய ஒன்றியத்திலும் தமிழ்நாட்டிலும் நடக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் திமுக தனது திறமையால் வெல்லவில்லை. வாக்கு விகிதங்களில் வெல்லவில்லை. எதிர்கட்சிகள் பலமின்மையால் மட்டுமே. கணக்கியல் தெரிஞ்சாப் போதும். இங்கிலாந்து தொழிலாளர்கள் கட்சி வாக்கு விகிதமும் பெற்ற வெற்றிக்கும் நுட்பமான அரசியல் உள்ளது.அம்பேட்காரியத்தையும் அயோத்திதாசரியத்தையும் கரைத்துக்குடித்தவர்களால் மட்டுமே செல்வப்பெருந்தகைகளுக்கும் ஆம்ஸ்ட்ராங்குகளுக்கும் பூவையார்களுக்கும் காடுவெட்டி குருக்களுக்கும் இடையிலான நுண்ணிய வேறுபாட்டை உணரமுடியும். அந்த நுட்பத்தை உணரமுடியாதவர்களெல்லோருமே அப்பட்டமான ஜாதிவெறியர்கள் என்றறிக. Period. No arguments. தொழில்முறை குற்றவாளிகளையெல்லாம் கொள்கையின் பெயரால் போராளியாகக் கொண்டாட முடியுமென்றால் சந்தனக் கடத்தல் செய்து சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பன் பெரும் வனக்காவலன் தானே?. படுகொலை செய்து தூக்குத் தண்டனை பெற்ற ஆட்டோசங்கர் ஆனப் பெரிய சமூக சேவகர் தானே . ஜான்பாண்டியன் உண்மையான ஜாதி ஒழிப்புப் போராளி தான்.(சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழிப்பு குறித்து 1951 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட முதல் மசோதா மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் அம்பேத்கரின் விவாதங்கள் சிறப்பானவை. அந்த மசோதாவை அறிமுகப் படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் கே.என். காட்ஜு  தன்னால் ஆனவரை அந்த மசோதாவை நீர்த்துப் போகவே முயற்சி செய்தார்.  அவருடன் நடந்த வாக்குவாதத்தில் கிண்டலும் கோபமும் தெறிக்க டாக்டர் பீமா ராவ் அம்பேத்கர் பேசியவற்றை மனோஜ் மிட்டா தன் அற்புதமான நூலான Caste Pride ல் (ஜாதிப் பெருமை) விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். நண்பர் ஒருவர் மொழியாக்கம் செய்து வரும் அந்த நூலிலிருந்து ஒரு சிறு துளி இங்கே:)



“தீண்டாமைக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்து மசோதாவிலிருந்த பிரிவினை நீர்த்துப் போகச் செய்வதற்கு காட்ஜு செய்த முயற்சியை சுருக்கமாக அம்பேத்கர் இவ்வாறு விளக்கினார்: ‘குற்றவாளியின் சிந்தனையில் வருத்தம் ஏதும் இல்லாத அளவுக்கு தண்டனை மென்மையாக இருக்க வேண்டும்.’ அம்பேத்கரின் எதிர்வினை அரிக்கும் தன்மை கொண்ட அமிலம் போலிருந்தது. ‘எனது மரியாதைக்குரிய நண்பர் காட்ஜு தண்டனை குறித்து நாவன்மையுடன் பேசினார். தண்டனை மிக மிக மென்மையாக இருக்க வேண்டும் என்றார் அவர். அவரே இந்தக் குற்றங்களைச் செய்ய நினைப்பதால் தான் மென்மையான தண்டனை வேண்டுமென மன்றாடுகிறாரோ என நான வியக்கிறேன்,’ என்றார் அவர்.



அதே தொனியில் டாக்டர் அம்பேத்கர் மேலும் கூறியது: ‘குற்றவாளிகள் உண்மையில் அன்பும் இரக்கமும் பொங்கி வழியும் கருணை மிக்கவர்களென்பதும், அவர்கள் செய்தது மன்னிக்கப்பட வேண்டிய தவறு மட்டுமே என்பதும் அவரது அடிப்படையான அனுமானமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்கிறேன். அதற்குத் தண்டனையாக அவர்களை எச்சரித்து பின்னர் விடுதலை செய்துவிடலாம் என அவர் பரிந்துரைக்காமல் இருப்பது எனக்கு பெரும் ஆறுதல் தரும் விஷயம். ஆம். அதுதான் மிகச் சிறப்பாக இருக்கும்; குற்றவாளியை ஒரு அன்புமிக்க நபராக மாற்றுவது தான் நம் நோக்கம் என்றால், அவரை எச்சரித்து விட்டு விடுதலை செய்து விடலாம். அவர் அன்பு செலுத்துபவராகவே தொடர்வார், அவருடைய இதயத்தில் காயமேதும் இருக்காது.’ என்பதாகவே உள்ளது. 



சென்னை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பெரம்பூருக்கு மாயாவதி வந்த பிறகு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உடனிருந்தார். உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய மாயாவதி, "ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. புத்தர் காட்டிய மனிதாபிமான பாதையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். குடும்பத்தினருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தனது வீட்டின் அருகிலேயே ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளைஇஅ கண்டுபிடிக்க பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாநில அரசு உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். அடித்தள மக்கள் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. அந்த மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும். சட்டத்தை நாம் கையில் எடுக்க வேண்டாம் என்று பகுஜன் சமாஜ் கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங் விட்டுச்சென்ற பணிகளை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் தொடர வேண்டும்" எனத் தெரிவித்தார்,                          இந்த நிலையில் இதில் பொது நீதி யாதெனில் :- "1990 ஆம் ஆண்டு காலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி உறுவாக்கி அதில் தனக்கு வேண்டிய மாயாவதியை தலைவர் ஆக்கிய காலம் சென்ற பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கான்சிராம் உருவாக்கிய பலரில் முதலானவர் நெய்வேலி அம்பேத்கர் ராஜனும் ஒருவர் அவர் மூலம் கான்ஷிராமிடம் சேர்ந்து பின் அவர் காலமான பின்னர் தமிழகத்தில் அரசியல் ரீதியாக வளர்ந்த நபர்கள் இருவர் அதில் ஒருவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் சமீபத்திய நாடாளுமன்ற வேட்பாளர், மற்றொரு நபர் தான் இந்த ஆம்ஸ்ட்ராங் என்பதே இங்கு பலரும் பார்க்க இயலாமல் வரலாறு அறியாமல் உள்ள அரசியல் பார்வையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...