முன்னாள் முதலமைச்சர் - பெருந்தலைவர் கு. காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று பிரதமர், முதல்வர் அஞ்சலி
தமிழ்நாடு உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இன்று முதல் ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி VVD பள்ளியில் இந்தத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். அதேபோல்
உலகத்தரம் வாய்ந்த சாதனைகளில் ஒன்றான இந்தக் காலை உணவுத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற குழந்தைகளின் புன்னகையே இந்தத் திட்டத்தின் வெற்றிக்குச் சான்று எனவும்,
"2020 ஆம் ஆண்டு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்ற திட்டம், இந்தியா முழுக்க வர வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசை, நிதி பற்றாக்குறை இருப்பின் மத்திய அரசு செலவு செய்யும்"
கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் - தலைவர் கு. காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர்களிடையே இருந்த அன்பும் - நட்பும் நாடறிந்தவை. விடுதலைப் போராட்டம் - மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் - ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளைக் கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றும் காலை உணவுத் திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்கள் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். எனத் தெரிவித்துள்ளார் மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும் ! திரு கே. காமராஜர் பிறந்த தினத்தை யொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, கர்ம வீரர் திரு கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“திரு கே காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவரை நான் நினைவுகூர்கிறேன். தனது தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைப் பண்புக்காகவும், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளுக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது லட்சியங்களை நிறைவேற்றவும் நீதியும், கருணையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கவும் நாம் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்