மழைப்பொழிவு மற்றும் கரியமில வாயு அதிகரிப்பை இணைக்கும் புதிய ஆய்வு பல்லுயிர் பெருக்கத்தின் எதிர்கால பாதுகாப்புக்கு உதவும்
பசுமைக் குடில் வாயுக்களின் அளவு முன் எப்போதும் இல்லாத வகையிலான உலகளாவிய அதிகரிப்பு, பூமத்தியரேகை பிராந்தியத்தில் மழைப்பொழிவைக் குறைக்கும் என்றும், அதனுடன் தொடர்புடைய மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு இந்தியா மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் உள்ள பசுமையான காடுகளை இலையுதிர் காடுகளாக மாற்றக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் பாலியோசயின்சஸ் ஆராய்ச்சியாளர்கள், மேற்கண்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.
இந்த காலகட்டத்தில்தான் இந்தியத் தட்டு தெற்கு அரைக்கோளத்திலிருந்து வடக்கு அரைக்கோளத்திற்கு பூமத்திய ரேகைக்கு அருகில் நீடித்தது. இது இந்திய தட்டை ஒரு சரியான இயற்கை ஆய்வகமாக மாற்றுகிறது,
ஜியோசயின்ஸ் ஃபிரான்டியர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, அதிகரித்த கார்பன் உமிழ்வின் கீழ் பூமத்திய ரேகை / வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இது கரியமில வாயு மற்றும் நீரியல் சுழற்சிக்கு இடையேயான தொடர்பை அறிய உதவுகிறது. எதிர்காலத்தில் பல்லுயிர் பெருக்க முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க உதவுகிறது.
கருத்துகள்