தமிழ்நாட்டில் சண்டாளர் எனும் ஜாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென மாநில அரசுக்கு பட்டியலினத்தோர் மாநில ஆணையம் பரிந்துரை
தமிழ்நாட்டில் சண்டாளர் எனும் ஜாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென மாநில அரசுக்கு பட்டியலினத்தோர் மாநில ஆணையம் பரிந்துரை
செய்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய நிலையில் பல்வேறு எதிர்வினைகள் வந்ததால் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் பஞ்சமா பாதகம் செய்தவர்கள் பற்றி குறிப்பிடும் வார்த்தையாவே சன்டாளர் எனும் சொல் இருந்து வந்தது ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குறித்து திரிந்து சர்ச்சைக்குரிய ஒரு பாடலைப் பாடி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் என்ற நபர் பிரச்சாரம் செய்த பாடலில் இடம்பெற்ற சண்டாளன் எனும் வார்த்தை தீண்டத்தகாதவராக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஒரு ஜாதி மக்களை சுட்டிக் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக சாட்டை துரைமுருகன் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
சண்டாளன் என்ற வார்த்தை சினிமா பாடல்களில் உள்ளன. முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அதிகம் பயன்படுத்தியுள்ளார். அதிமுக பாடலை பாடிய சாட்டை துரைமுருகன் மீது கைது நடவடிக்கை எடுத்தவர்கள், அதிமுக மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சண்டாளன் என்ற ஒரு ஜாதி இருப்பது எனக்குத் தெரியாது.வழக்கு மொழியாகத் தான் பேசினேன். இந்த வார்த்தை கந்த சஷ்டி கவசத்திலிருப்பதால், அதை எழுதியவர் மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் வழக்கு போட முடியுமா? என வினா எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னர் சண்டாளர் எனும் ஜாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மனிதர்கள் உயிர் வாழத் தேவையான அடிப்படைப் பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகத்தின் பயனுள்ள பணிகளைச் செய்யும் சமூக குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்கு பயன்படுத்துவது, கலை இலக்கியங்களிலும் திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.
இது அப்பெயர்களில் உள்ள மக்களையும், அவர்களை போன்ற மக்களையும் புண்படுத்தும் செயல். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணம் பொதுச் சமூகத்தில் இல்லை. பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 ன் படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்
. தமிழகத்தில் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர் தமிழ்நாடு பட்டியல் ஜாதியினர் அட்டவணையில் 48 ஆம் இடத்தில் உள்ளது. சமீப காலமாக இந்தப் பெயர் பிறரை இழிவுப்படுத்தும் நோக்கில் பொதுவெளியில் பேசப்படுவதைக் காண முடிகிறது. எனவே இனி சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாதென்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது.
மீறிப் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் சங்க இலக்கியங்களில், மந்திரங்களில் சண்டாளர்கள் என்ற வார்த்தை இருக்கிறது. கந்த சஷ்டி கவசத்தில் சண்டாளர்கள் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது ஒரு சமூகம் இருப்பதே தெரியாதென்று சீமான் கூறியுள்ளார். தமிழில் மட்டும் தான் ஒரு அழகு என்றால் முருகு அதற்கு நம் பக்கத்தில் வசிக்கும் முருகன் மகிழ்ச்சி அடைகிறேன் என நினைப்பது எவ்வளவு தவறு அது போலவே வார்த்தைகள் பல அர்த்தம் தரும் அதை பயன்படுத்தும் வகையில் உபயோக இடத்தில் மாறுபடும், அதாவது நாகர்கோவில் பகுதியில் 'தட்டில் சாப்பிட்டு தட்டில் தூங்கினான்" என்றால் தட்டில் என்பது வீட்டில் மேல் தளமாகும். அதுபோலவே சரடு என்பது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சணல் என்பதைக் குறிப்பதாகும். இப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசி வரும் நடைமுறையில் உள்ள வார்த்தை தற்போது தவறானது தான் இங்கு வேடிக்கை.. இனி அதுவே வாடிக்கை. இனி எல்லா வார்த்தைகளும் தமிழ் இலக்கிய இலக்கண உரை தேடல் நடந்த பிறகு உயர்நீதிமன்றம் வழக்கில் விசாரணை நடத்தி முடிவு செய்யும் நிலை வரும் என்பதே இங்கு பொது நீதி.
கருத்துகள்