ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியான 12 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு
செப்டம்பர் மாதம்,3 ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான கேசவ ராவ் (தெலுங்கானா), மம்தா மோகன்தா (ஒடிசா) ராஜினாமா செய்தனர். அதே போல், அசாமிலிருந்து கமக்யா பிரசாத், சர்பானந்தா சோனாவால், பீஹாரிலிருந்து மிஷா பார்தி, விவேக் தாக்கூர், ஹரியானாவிலிருந்து தீபேந்தர் சிங் ஹூடா, மத்தியப் பிரதேசத்திலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா, மஹாராஷ்டிராவிலிருந்து உடயன்ராஜ் போன்ஸ்லே, பியூஷ் கோயல், ராஜஸ்தானிலிருந்து கே.சி.வேணுகோபால், திரிபுராவிலிருந்து பிப்லாப் குமார் ஆகியோர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்கள் தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளனர். ஆகவே நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதலி காலியாக உள்ள 12 இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஆகஸ்ட் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும்ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் ஆகஸ்ட் மாதம்.22 ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 26 மற்றும் ஆகஸ்ட் 27. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கருத்துகள்