இந்து சமய அறநிலையத்துறை ஒப்பந்ததாரர்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து,
அறநிலையத்துறை தலைமையகத்தில் பணிபுரியும், 130 க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்த இ.பி.எப்., தொகையை ஒப்பந்ததாரர்கள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாகச் செலுத்தவில்லை எனப் புகார் உள்ளதைக் கண்டித்து அறநிலையத்துறை தலைமையகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 130க்கும் மேற்பட்டோர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: "நாங்கள் மாநிலத்தின் பல பகுதியில் இருந்து வந்து இங்கு விடுதியில் தங்கிப் பணிபுரிந்து வருகிறோம். விடுதியின் மாதக் கட்டணம், 7500 ரூபாய் ஆகிறது. குடும்பத்திற்கும் பணம் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் இந்த மாதம் 13 ஆம் தேதி கடந்தும் சம்பளம் போடவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், மற்றும் ஆணையர் தலையிட்டு எங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும். எனக் கூறினர்.
கருத்துகள்