வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ரூபாய்.2 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை குறித்து உத்தரவு.
ரூபாய்.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறைக்கு நிதி கையாளும் நிறுவனங்கள் தெரிவிப்பதில்லை என்பதால் சொகுசு ஹோட்டல்கள், விருந்து அரங்குகள், ஆடம்பர பிராண்ட் விற்பனையாளர்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் நடைபெறும் பணப்பரிமாற்றத்தைக் கண்காணிக்குமாறு வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவுறுத்தியது.
இந்தியாவில் வருமான வரி வசூலுக்காக 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் மூலம் வருமான வரி வசூல், கணக்கீடு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் முதன்மைச் சட்டமாகிறது. இந்தச் சட்டத்தின் படியே வருமான வரி தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டன. வரி செலுத்துவோருக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளும் சட்டத்தில் உள்ளது. வருமான வரிச் சட்டம் 1961ல், பிரிவு 80 C , பிரிவு 80 D, பிரிவு 80 G, பிரிவு 10 (10D) போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகள் மூலம் வரி செலுத்துவோர் வரி செலுத்துவோர் தங்கள் வரிக்குட்பட்ட வருமானத்திற்கு வரி விலக்குகள் பெற முடியும். இதிலுள்ள சலுகைகளை பயன்படுத்தும் வருமான வரிதாரர்கள் சிலர், வருமான வரியைக் குறைக்க நடந்த நிதி பரிவர்த்தனைகளை மறைப்பதாகக் கூறப்படுகிற விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறைக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியது.
தொடர்பாக மத்திய செயல் திட்டம் 2024-25 என நேரடி வரிகள் வாரியம் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நமது நாட்டில் ரூபாய்.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கமாக நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறைக்கு நிதி பரிவர்த்தனை அறிக்கை மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக அப்படி நடக்கவில்லை. அண்மைக்கால அறிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆய்வு செய்த போது, இந்த விதிமீறல் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
வருமான வரிச்சட்டம் பிரிவு 139 A-ன்படி குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் PAN எண் வழங்கப்படவோ, பெறப்படவோ வேண்டியது கட்டாயமாகும். ஆனால் இந்த விதி சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய எந்த வழிமுறையும் இல்லாத நிலை இருக்கிறது. குறிப்பாக அதிக மதிப்பு கொண்ட செலவினங்களின் போது வரி செலுத்துவோரைப் பற்றிய தகவல்களை சரிபார்க்க வேண்டும். எனவே இதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை கண்டறிவது கட்டாயமாகும். விற்பனையாளர்கள், மற்றும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவமனைகள், பெரிய ஆயத்த ஆடை வடிவமைப்பாளர் கடைகள், வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு மருத்துக்கல்வி இடங்களில் பெரிய அளவிலான பணப்பரிமாற்றம் போன்றவற்றில் விதிகள் கடைபிடிக்காததும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அதிக பணம் புழக்கத்திலுள்ள இடங்களில் பெரிய நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணித்து ஆதாரங்களை வருமான வரித்துறை அடையாளம் காண வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தி சரிபார்க்க வேண்டும்.இதைப்போல வரி பாக்கி அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறி உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி ரூபாய்.24.51 லட்சம் கோடியாக இருந்த பாக்கி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் ரூபாய்.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மிகவும் அதிகமான உயர்வாகும். எனவே உடனடி மற்றும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது" என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்