திருநெல்வேலி மாநகரத்தின் காவல்துறை ஆணையராக ரூபேஷ் குமார் மீனா உள்ளிட்ட 17 ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் பணியிட மாற்றம்.
தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலர் தீரஜ் குமார் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் கண்டுள்ளபடி: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் காவலர் வீட்டு வசதிக் கழகத்தில் தலைவராக நியமனம். இப்பொறுப்பிலிருந்த சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஜூலை மாதம் 31 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான தினகரன், அப்பிரிவில் ஏற்கெனவே சைலேஷ் குமார் யாதவ் வகித்து வந்த பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்.
பொதுப்பிரிவு ஐஜி டி.செந்தில் குமார் மேற்குமண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார். அப் பணியிலிருந்த ஐஜி பவானீஸ்வரி பணியமைப்பு (Establishment) பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டார். அங்கு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மாநில மனித உரிமை ஆணைய ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார்.அங்கிருந்த ஐஜி பி.சாமூண்டீஸ்வரி பொதுப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார். குற்றப்பிரிவு ஐ.ஜி ஏ.ராதிகா சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்த பி.கே.செந்தில்குமாரி குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார். காவலர் நலன் பிரிவு ஐஜி நஜ்முல் ஹோடா நவீன மயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி காவல்துறை ஆணையரான பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக பணி மாற்றப்பட்டார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்த அபிஷேக் தீக் ஷித் ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டார். திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார் இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியமர்த்தப்பட்டார். அங்கிருந்த எம்.துரை காவலர் நல டிஐஜியாக மாற்றப்பட்டார்.சென்னை போக்குவரத்துக் காவல்துறை இணை ஆணையர் தேவராணி வேலூர் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். என உள்துறைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்