திரைப்பட இயக்குனரும் நடிகருமான சேரன் சில நாள் முன்பு காரில் கடலூர் சென்று கொண்டிருந்த போது அவரது காரில் பின்னால் வந்த தனியார் பேருந்து அனுமதி இல்லாத ஏர் ஹார்னை அடித்துக் கொண்டே வந்ததால்
கடுமையான கோபமான சேரன் கீழிறங்கி அந்தப் பேருந்து ஓட்டுநரின் தவறை சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அந்தக் காணொளிக் காட்சி வெளியாகி உண்மை அறியாமல் பலராலும் சர்ச்சைனது. இதை அதோடு விட்டு விடாமல் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது ஓட்டுநர் செய்த தவறான செயல் தான் என்பதை உணராமல் அந்தச் சம்பவம் சமூக ஊடகங்கள் வாயிலாக வைரலான நிலையில் சேரன் மீதே புகார் அளித்தனர், புகார் அளித்த பேருந்துகள் மீது கடலூரில் இயங்கும் சுமார் 20 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் தவறாகப் பயன்படுத்தியதற்காக ஒவ்வொரு பேருந்துக்கும் தலா 10 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சேரன் நடுரோட்டில் இறங்கி வாக்குவாதம் செய்த வீடியோவை வெளியிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் புகார் அளித்து இருக்கிறது என செய்தி வருகிறது. ஆனால் அந்தச் செய்தி உண்மையில்லை என அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.
சேரன் செய்தது தான் சரி தான் என அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துகள்