இலஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 20,000 அபராதம் விதிக்கப்பட்டது
புதிதாக மின்சார இணைப்பு வழங்குவதற்கு ரூபாய்.2 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும்: ரூபாய்.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தின் அயப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார்(வயது 48). இவர் 2014 ஆம் ஆண்டு தான் கட்டி வந்த புதிய வீட்டின் முதல் தளத்திற்க்கு மின் இணைப்பு வேண்டியதால் அயப்பாக்கம் மின்சார வாரியத்தின் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அதில் புதிய மின் இணைப்புக்கு உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்த சுகுமார் (வயது52) என்ற நபர் ரூபாய் இரண்டாயிரம் லஞ்சமாகக் கொடுத்தால் தான் மின்சார இணைப்பு வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார் . அதையடுத்து இலஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயக்குமார் திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கொடுத்த புகாரில் ரூபாய். இரண்டாயிரம் வாங்கும் போது உதவி பொறியாளர் சுகுமார் கைது செய்யப்பட்டார்.
அதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திருவள்ளூர் இந்த நிலையில் மாவட்டக் குற்றவியல் சிறப்பு நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்த இந்த வழக்கின் விசாரணை முடிவில் புதிய மின்சார இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் சுகுமாருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் லஞ்சம் கேட்டதற்காக ரூபாய்.10 ஆயிரமும், வாங்கிய குற்றத்திற்காக ரூபாய்.10 ஆயிரம் என மொத்தம் ரூபாய்.20 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து மின்வாரிய உதவிப் பொறியாளர் சுகுமாரை திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்