செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டம் சிறுதாவூர் ஊராட்சி மன்றத்தில் அமைந்துள்ள அரசினர் பள்ளியின் வகுப்பறையில் மேற்பூச்சுத் தளம் பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் சிறுதாவூர் ஊராட்சி ஒன்றிய அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போதே மாணவ, மாணவிகள் தலை மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் சில மாணவ, மாணவியருக்கு காயமேற்பட்டுள்ளது தமிழ்நாடு பள்ளி கல்வி துறை நிர்வாகத்தின் சீர்கேட்டையே இது உணர்த்துகிறது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதாக சொல்லிக்கொண்டு அப்பள்ளிகளின் கட்டிடடமே கலகலத்து உடைந்து விழும் அளவிற்கு வேடிக்கை பார்க்கும் கொடுமை தான் ஊழல் நடக்கிறது என்பதை உணர்த்தும் அடையாளம். குழந்தைகள் பாதுகாப்பாகப் படிக்க கூட முடியாத நிலை இருக்கும் நிலையில், சிறந்த ஆட்சி என்று கூறமுடியாத நிலையில் இந்த பள்ளியில் போதிய இட வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அரசு பள்ளிகளை பராமரிக்கக் கூட முடியாத அரசு தனியார் பள்ளிகளை வளர்ச்சி காண வைத்தது அப்படியே இருந்து என்ன பயன்?
சென்னையில் பலகோடி ரூபாய் செலவில் சொகுசு கார் பந்தயம் நடத்த முடிகிற நம் அரசால், ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் கட்டிடங்களைப் பராமரிக்க முடியாமல் போவது தான் ஊழல் மாடல் என மிஸ்டர் பொதுஜனம் பேசும் போது
மாணவி ஒருவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டுள்ளது திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி ஒப்பந்தக்காரகளிடம் 20 சதவீதம் கமிஷன் பெற்று கொண்டு கட்டிடத்தின் தரம் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாத மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மனம் கல்லாகி போனதால் வரும் காலங்ககளில் அரசு கட்டுமானம் அபாயத்தில் சிக்கி தவிக்கும் எனாபதே இங்கு பொது நீதி.
கருத்துகள்