சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள பச்சை முத்து உடையாருக்குப் பாத்தியப்பட்ட ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட எஸ்ஆர்எம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில்
செயல்படும் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 காவலர்கள் அங்குள்ள விடுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தினர்
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் பலருக்கும் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் அடிப்படையில் அங்கு 1000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களில் ஆண்கள், பெண்கள் விடுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையின் புறநகர் பகுதியான பொத்தேரி எனும் ஏரியையும், காட்டான் குளத்தூர் எனும் குளதையும் சட்டவிரோத அரசாணை மீறல் செய்து கட்டப்பட்ட நிறுவனங்களாகும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பகுதி இங்கு எஸ்ஆர்எம் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இங்கு பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்படுகின்றன. சிவாஜி திரைப்படத்தில் வரும் வில்லன் ஆதி கேசவன் போல மாணவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் இந்திய அளவில் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தின் கல்லூரியான எஸ்ஆர்எம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி கர்நாடகா ஆந்திரா, கேரளா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகிற நிலையில், விடுதிகளில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவலகள் வந்ததையடுத்து காலையிலேயே திடீரென எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதனையடுத்து எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆண்கள், பெண்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். மேலும் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் அவர்களின் இருசக்கர வாகனங்களில் தீவிரமாச்க சோதனை நடந்தது.
வெளி நபர்கள் உள்ளே செல்லும் போது அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் சோதனை நடந்தது. , ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அதே கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்கள காவல்துறையினர் கைது செய்தனர்.
2022 ஆம் ஆண்டு கல்லூரியைச் சேர்ந்த சில வட மாநில மாணவர்கள் நெடுஞ்சாலையில் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். அது குறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகவே இந்தத் தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்ததையடுத்து அந்த மாணவர்கள் வாடகைக்கு பிடித்துத் தங்கியிருக்கும் வீடுகளில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட மாணவர்களை சிறையிலடைத்தனர்
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆங்காங்கே போதை பொருட்கள் ஒழிப்புக்கான சோதனை நடத்தப்படுகிறது. அது போல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் இந்தச் சோதனை அதிகரித்து.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த போதையால் பல வெறிச் செயல்களில் இளைஞர்களும் மாணவர்களும் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு போதையில்லா மாநிலமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
கருத்துகள்