வயநாடு நிலச்சரிவில் பலி
எண்ணிக்கை 318 ஆக உயர்வு, உயிர் பிழைத்துள்ளோரைத் தேடுதல் செய்ய ட்ரோன்கள்
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் உயிர் பிழைத்தோர் எங்கேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்திக் கண்டறிய திட்டமிட்ட நிலையில்
முன்னதாக, கணமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் ஜூலை மாதம் 30-ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு பயங்கர நிலச்சரிவு
ஏற்பட்டதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு புதைந்தன. வீடுகளிருந்த தடயமே இல்லாமல் அப்பகுதி முழுவதும் மண்ணால் மூழ்கி மூடியது.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்களில் நான்காவது நாளாக மீட்பு பணியில் முழு வீச்சில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோரக் காவல்படையினர், இந்திய கடற்படையின் வீரர்கள் இணைந்து கூட்டாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ளூர்வாசிகள் மூவர், வனத்துறை ஊழியர் ஒருவரும் இணைக்கப்பட்டனர்.
இதுவரை 318 நபர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சாலியாற்றில் மட்டும் 172 பிரேதங்கள் மீட்கப்பட்டன. 298 நபர்களைக் காணவில்லை எனும் புகார்கள் பதிவாகியுள்ளன.
சாலியாற்றுப் பகுதியில் சடலங்களைத் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்கள் வயநாடு மற்றும் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கருத்துகள்