நிலத்தை அளவீடு செய்து தராமல் காலதாமதம் செய்த வருவாய்துறை சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூபாய் 40 ஆயிரம் இழப்பீடு
நிலத்தை அளவீடு செய்து தராமல் காலதாமதம் செய்த வருவாய்துறை சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூபாய் 40 ஆயிரம் இழப்பீடு தர மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வடமலையனூர் குரூப் கிராம விவசாயி இராமன் ஒரு மூத்த குடிமகனான இவர் தனது நிலத்தை அத்து மால் செய்து அளவீட்டுத் தரும்படி நில அளவைத் துறைக்கு உரிய கட்டணத்தை இணையவழியில் செலுத்தியதோடு விண்ணப்பம் செய்து
பலமுறை அலுவலகத்திற்கும் நேரில் சென்று கோரிக்கை விடுத்தும் பலனில்லாததால்
விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகு மனுதாக்கல் செய்கிறார்,
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் வருவாய்துறை சார்ந்த நில அளவைத் துறையின் சேவைக் குறைப்பாட்டை உறுதி செய்து
பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 40 ஆயிரம் இழப்பீடு கொடுக்கும் படி வருவாய்துறை சார்ந்த நில அளவைத் துறைக்கு உத்தரவிட்டது.
கருத்துகள்