மயிலாப்பூர் 'ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்' நிறுவனத்தில், ரூபாய்.525 கோடி நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது!
மயிலாப்பூர் 'ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்' நிறுவனத்தில், ரூபாய்.525 கோடி நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது!
மயிலாப்பூர் ஹிந்து ஸாஷ்வத (நிரந்தர) நிதி லிமிடெட் நிறுவனம் மூலம் நிதி மோசடி செய்ததாக
140 பேர் புகார் அளித்த நிலையில் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கைது செய்தனர்
வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் மயிலாப்பூர் ஹிந்து ஸாஷ்வத (நிரந்தரமான) நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் நிதி நிறுவன மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதி வைத்திருந்ததாகவும், பலர் உறுப்பினராக இருந்ததாகக் தெரிகிறது.
ரூபாய். 540 கோடி வரை மோசடி என எழுந்த புகாரில் வின் டிவி தேவநாதன் யாதவை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, மயிலாப்பூர் மாடவீதியில் 150 ஆண்டுகளாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் செயல்படுகிறது. அதன் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தேவநாதன் யாதவ் இருக்கிறார்.நிதி நிறுவனம் தொகை முதிர்வு காலத்திற்குப் பின்னரும் தங்கள் முதலீடுகளைத் திருப்பித் தரத் தவறியதாகக் கூறப்படுகிறது,
மேலும் வாக்குறுதியளித்தபடி வட்டி கொடுக்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான ஆர்.குணசீலன் மற்றும்
டி.மஹிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவநாதன் யாதவ் மற்றும் அவரது நிறுவனம் ரூபாய் 24.5 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்ட டெபாசிட்டர்கள் புகார் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக போட்டியிட்ட தேவநாதன் யாதவ் 2017 ஆம் ஆண்டு முதல் மேற்கண்ட நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்தார். இந்தியாவின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவராகவும், வின் டிவியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் அம்பேத்கர் ராஜன் மூலம் உத்திரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர்
கான்ஷிராமிடம் பணியிலிருந்து பின் அவர் காலமாகவே தமிழ்நாட்டுக்குத் தனவந்தராக மாறி வந்த நிலையில் அது ஒரு பின் கதை என்று பலரும் அறிந்த நிலையில், ஆனால் தற்போது இந்த நிதி மோசடி குறித்து முறையாக ஆய்வு செய்துள்ளோம். இது முதன்மையானது , மேலும் நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ் உட்பட நான்கு பேருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார். அப்பாவி மக்கள் பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே இது வெட்கக்கேடானது
என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை நாட்டிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில், "கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள் மற்றும் ஓய்வூதியப் பணம் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் அசோசியேஷனில் முதலீடு செய்திருக்கிறார்கள். தேவநாதன் யாதவை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது, அந்த அசோசியேஷன் பணத்தை அவர் பாஜக 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பயன்படுத்தியதாகத் தகவல். பணத்தை திருப்பி கொடுக்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டது.அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு, இப்போது பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். வெட்கக்கேடானது.
பண விஷயங்களில் நீங்கள் எப்போதாவது மக்களுக்காக உங்கள் அக்கறையை உயர்த்தியுள்ளீர்களா? நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள். மோசடி செய்ததற்காக அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் அவரை விடுவிக்கும்." எனவும் விமர்சித்துள்ளார்.பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை
கருத்துகள்