முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

78 வது சுதந்திர தின விழா செங்கோட்டையில் 11வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்

சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து தொடர்ந்து


11 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.


நாட்டின் 78 வது சுதந்திர தின உரையில், நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்து போராடிய எண்ணற்ற மக்களுக்கு இது மரியாதை செலுத்தும் நாள் என்று மோடி கூறினார். நாடு அவர்களுக்குக் கடன்பட்டுள்ளது என்றார் அவர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தொடர்ந்து டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது சந்திரயான் 3 திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேலுக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரியை சேர்ந்த செவிலியர் ஆ.சபீனாவுக்கும் முதல்வர் வழங்கினார்.





இதேபோல் முதலமைச்சரின் நல்ஆளுமை விருது பெற்றோர் விவரம்: தரவு தூய்மை திட்டம், முதல்வரின் முகவரித்துறை தலைமை தொழில்நுட்ப அதிகாரி டி.வனிதா, சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி - பொதுநூலகத்துறை இயக்குநர் கே.இளம்பகவத், மூளைச்சாவு கொடையாளியின் உறுப்பு கொடை - உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷினி, நான் முதல்வன் திட்டம் - தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.


பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருதுகள் பிரிவில் சிறந்த மருத்துவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஜா.விஜயலட்சுமி, சிறந்த நிறுவன சென்னையை சேர்ந்த வித்யாசாகர், சிறந்த சமூக பணியாளர் சென்னையை சேர்ந்த ம.சூசை ஆன்றணி, மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனமாக தூத்துக்குடியை சேர்ந்த சந்தானம் பேக்கேஜிங், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


தொடர்ந்து, சமூகநலத்துக்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருது பிரிவில் மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது சென்னையை சேர்ந்த மீனா சுப்ரமணியனுக்கும், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த தொண்டு நிறுவனம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டது.சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளை கோவை மாநகராட்சி, திருவாரூர் நகராட்சி, சூலூர் (கோவை) பேரூராட்சி, சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலமாக 14-வது மண்டலம் ஆகியன விருதுகளை தட்டிச் சென்றன.




முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் பிரிவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெ.கதிரவன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோஷன் ரெகோபெர்ட், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.ஜெயராஜ், செ.நிகிதா, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கவின் பாரதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ச.உமாதேவி, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கா.ஆயிஷா பர்வீன் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். ஆளுநர் ரவி , 78 வது சுதந்திர தினத்தன்று காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேசிய சுதந்திர போராட்ட வீரர்களைப் போல உடையணிந்த பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உற்சாக பங்கேற்பு, கொண்டாட்டங்களுக்கு ஒரு துடிப்பான மற்றும் தேச பக்தி உணர்வைக் கூட்டியது.


78வது சுதந்திர தினத்தன்று ராஜ் பவனில் நடந்த கொடியேற்றும் விழாவில் மாண்புமிகு ஆளுநர். ஆர்.என். ரவி அவர்கள் மற்றும் கவர்னர் மனைவி திருமதி. லக்ஷ்மி ரவியுடன் குழந்தைகளும் கலந்து கொண்டனர்நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுனில் பலிவால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கி சிறப்பித்தார் விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் -


உதகை அரசு கல்லூரி மைதானத்தில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தேசிய கொடியினை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 லட்சம் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - ஆர்.டி.சிவசங்கர் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வோடு உதகையில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம் நடந்தது. உதகையில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய சாலையிலுள்ள பள்ளி முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை கூடுதல் எஸ்பி சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  - ஆர்.டி.சிவசங்கர் 




போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வோடு உதகையில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம் நடந்தது. உதகையில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய சாலையிலுள்ள பள்ளி முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை கூடுதல் எஸ்பி சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவிகள் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி முன்னே ஓடிச் செல்ல அதன் பின்பு மாணவ, மாணவிகள் உற்சாகமாக ஒடினர்.




மாணவிகள் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி முன்னே ஓடிச் செல்ல அதன் பின்பு மாணவ, மாணவிகள் உற்சாகமாக ஒடினர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ,



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி  விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் தா.  கிறிஸ்துராஜ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டனர், சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


உதகை அரசு கல்லூரி மைதானத்தில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தேசிய கொடியினை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 லட்சம் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வோடு உதகையில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம் நடந்தது. உதகையில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய சாலையிலுள்ள பள்ளி முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை கூடுதல் எஸ்பி சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் -


சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேசியக்கொடியை ஏற்றினார்.  காங்கிரஸ் தொண்டர்கள் நீளமான தேசியக் கொடியை கையில் ஏந்தி மரியாதை செலுத்தினர். தெற்கு ரயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் கொடியேற்றி ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

தெற்கு ரயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் கொடியேற்றி ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.


சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை காலை தேசியக்கொடி நடராஜர் பாதத்தில் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது . பின்னர் மேளதாளம் வழங்க கோயில் பொது தீட்சிதர்களின்  செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தேசிய கொடி எடுத்துச் செல்லப்பட்டு142 அடி உயரமுள்ள கீழ கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது, ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள  மிகவும் பழமை வாய்ந்த லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் சுதந்திர தின விழா கொடியேற்றம்  நடைபெற்றது,

ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள  மிகவும் பழமை வாய்ந்த லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் சுதந்திர தின விழா கொடியேற்றம்  நடைபெற்றது,

புதுச்சேரி அரசு சார்பில் புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர். நினைவகத்தில் சுதந்திர தின கொடியினை மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். 

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  கழகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசிய கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் தொண்டர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். 

,கோயமுத்தூர் வஉசி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். 

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மொ. நா. பூங்கொடி, உலக சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெண் புறாக்களை பறக்கவிட்டார்,

தெற்கு ரயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் கொடியேற்றி ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை காலை தேசியக்கொடி நடராஜர் பாதத்தில் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது . பின்னர் மேளதாளம் வழங்க கோயில் பொது தீட்சிதர்களின்  செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தேசிய கொடி எடுத்துச் செல்லப்பட்டு142 அடி உயரமுள்ள கீழ கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டதுஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள  மிகவும் பழமை வாய்ந்த லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் சுதந்திர தின விழா கொடியேற்றம்  நடைபெற்றது, புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  கோயம்புத்தூர் வஉசி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்,காரைக்குடி மதர் சிறப்பு பள்ளியில் 78 வது சுதந்திரம் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் அருண்குமார்  முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரா௧ ரோட்டரி கிளப் ஆஃப் காரைக்குடி பியர்ஸ்ஸ் சங்கத்தின் தலைவர் RTN. RM. முருகப்பன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புறையாற்றினார். பின்னர் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வுகளில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் RTN.முத்துக்குமார், RTN.சிவசுப்ரமணியன், RTN.குமரன், RTN.எட்வர்ட் சின்னப்பன், RTN.அய்யாசாமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்  ஆசிரியை ரச்சனா நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...