ஏ.ஜி.நூரானி இன்று காலமானார் அவருக்கு வயது 93.
அப்துல் கபூர் மஜித் நூரானி நமது காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர். எனது மாணவப் பருவம் முதல் அவரது எழுத்துகள் பிரபலம்.
அவர் எழுதியுள்ள பல நூல்களில் The Kashmir Question (1964), Ministers’ Misconduct (1973), Constitutional Questions and Citizens’ Rights (2006), and The RSS: A Menace to India (2019) குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றாசிரியரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஜி.நூரானி
பத்திரிக்கையாளர், எழுத்தாளர், என பன்முக தன்மை கொண்ட நூரானி ஒரு எழுத்தாளராக, இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றை குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஆர்எஸ்எஸ்: இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல், சவர்க்கரும் இந்துத்துவமும் ஆகிய புத்தகங்கள் அவரது படைப்புகளாக உள்ளன.
இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து ஆழமான ஆய்வுகளுடன் விவரிவாகவே எழுதியவர் ஆவார்.
கருத்துகள்