தமிழ்நாடு அரசின் மாநிலத் தொல்லியல் துறையில் உதவிக் காப்பாட்சியர் பணிக்கு நியமனம்
செய்வதில் சமஸ்கிருத மொழியில் பட்டப்படிப்பு அவசியம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)அறிவித்திருப்பது பலரும் நன்கு உண்மை உணர்ந்த போதும் சிலர் மட்டுமே அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தும் சர்ச்சையை உணர்ந்தாலும் சமஸ்கிருதம் மொழி அறிவு தேவை என்பது சரியான முறை என்பதே தமிழ் அறிஞர்கள் கருத்து.
தமிழ்நாடு தொல்லியல் துறையில் உதவிக் காப்பாட்சியர் பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டிருக்கிறது. அதில், சமஸ்கிருத மொழியில் பட்டப் படிப்புடன், பழமையான வடமொழி இணைந்த தமிழ் மொழியில், பண்டைய இந்திய வரலாறுகள் குறித்த அறிவும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.சி.எஸ்.சி) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
சமஸ்கிருத மொழி கட்டாயம் எனக் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அரசியல் சார்ந்த பலர் உண்மை அறியாதவர்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது முதலில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அல்லது
ராமதாசு தெரிவித்துள்ளதாவது :- ‘இந்த ஒரு அறிவிப்பு சமஸ்கிருதத் திணிப்பு’ என்று விமர்சித்திருக்கிறார். , நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘சமஸ்கிருதம் தெரிந்திருப்பது தான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிந்து கொள்ள ஒரே தகுதியா.?. தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு’ என்ற கேள்விகளை அவர் அறியாமையால் எழுப்புகிறார். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் உதவிக் காப்பாட்சியர் பணிக்கான தேர்வில் தான் இந்தச் சர்ச்சையை இவர்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்தப் பணிக்கு சமஸ்கிருதம் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தையும் முன்வைப்பவர்கள் சில உண்மைகள் அறிய வேண்டிய அவசியம் பற்றி இறுதியில் நாம் கூறுவோம்,
அதற்கு முன் ‘தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்படும் கல்வெட்டுகளில் சில பிரமி மற்றும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்துகளின் பயன்பாடுகள் தான் அதிகமிருக்கும். ஆனால், வரலாற்றுத் தொல்லியல் அறிவும், தமிழ் மொழிப் புலமையும் உள்ளவர்களால் மட்டுமே கிரந்த எழுத்து கொண்ட தமிழ் மொழியை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, அதற்கு சமஸ்கிருதப் பட்டப்படிப்பு தேவையில்லை’ என்பவர்கள். மேலும், ‘தமிழகத்தில் தொல்லியல் துறையில் உயர் பணிகளில் இருப்பவர்கள் எவரும் சமஸ்கிருதம் படித்து பணியில் சேரவில்லை. எனவும் கூறுகின்றனர் பணியில் சேர்ந்த பின் கிடைத்த அனுபவத்தின் மூலமாகவே கிரந்த எழுத்துகள் குறித்த அறிவை அவர்கள் வளர்த்துக்கொண்டனர். தொல்லியல் துறை பணிகளுக்கான ஆட்கள் தேர்வு விதிகளில் கூட சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லப்படவில்லை’ என்ற வாதமும் அவர்கள் சார்பில் முன்வைக்கப்படுகிறது.
சமஸ்கிருதம் கட்டாயம் என்று கூறியிருப்பது அப்பட்டமான சமஸ்கிருத திணிப்பு’ என்றும் விமர்சிக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எனும் ராமதாசு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சமஸ்கிருதம் வழக்கொழிந்த மொழி என்பதுதான் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அப்படி இருக்கும் போது, சமஸ்கிருத பட்டம் படித்தவர்கள் தமிழகத்தில் எங்கிருந்து கிடைப்பார்கள்? சமஸ்கிருதம் படித்தவர்களை தொல்லியல் துறையில் திணிப்பதற்காகவே இத்தகைய கல்வித் தகுதிகளை தமிழ்நாடு அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்ட ஆட்கள் தேர்வு அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்று, சமஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கி விட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழித் தமிழை கட்டாயத் தகுதியாக அறிவித்து புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும்’ என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அல்லது ராமதாசு வலியுறுத்தியிருக்கிறார். மேலும்
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)-யின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலின் பேரில் தான் இது வெளியிடப்பட்டிருக்கிறதா, அப்படி யென்றால், அமைச்சர் ரகுபதி கூறியது போல், உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தி.மு.க ஆட்சியா, திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா.. அல்லது மனு நீதியா’ என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். மேலும், ‘தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்திருக்கிறது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா, தமிழ் மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம், திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும்.
அரசுப் பணியிலிருந்து தமிழை அகற்ற தி.மு.க அரசு முனைவது கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்“ என்கிறார் சீமான். இது குறித்து ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலரான கே.ஸ்ரீதரன் கருத்து . “நான், தொல்லியல் துறையில் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டவன். நான் பணியில் சேர்ந்த போது சமஸ்கிருதம் படிக்கவில்லை. ஆனாலும், பிறகு சமஸ்கிருதம் கற்று அறிவை வளர்த்துக்கொண்டேன். ஆனால், என்னுடைய பணியில் சேர்ந்த நண்பர்கள் பலர் டிப்ளோமா படிப்பு மூலம் சமஸ்கிருதம் கற்றிருந்தனர். கல்வெட்டுக்களையும், செப்பும் பட்டயம் எனும் செப்பேடுகளையும் படிப்பதற்கு சஸ்கிருதம் தெரிந்திருந்தால் தான் எளிதாக இருக்கும்.
சமஸ்கிருத அறிவு இல்லாமலும் சமாளிக்க முடியும். ஆனால் அதே நேரம், சமஸ்கிருதம் தெரிந்திருந்தால், கல்வெட்டுகளைப் படிக்க உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. என்கிறார். உதாரணமாக, சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் சமஸ்கிருதத்தில் எழுதியிருப்பார்கள். அதன் பொருள் புரிய வேண்டுமானால் சமஸ்கிருத மொழியில் அறிவு தேவை.
தொல்லியல் செப்பேடுகள் வடமொழியில் தான் இருக்கும். அதில், முன்னுரை சமஸ்கிருத்தில் இருக்கும். வரலாற்றுக்கு அடிப்படையான சான்றுகளைத் தெளிவுபடுத்த சமஸ்கிருத அறிவு கொஞ்சம் தேவை தான். பொருட்களைச் சேகரிப்பதும், அவற்றை காட்சிப்படுத்துவதும் தான் காப்பாட்சியர், மற்றும் உதவிக் காப்பாட்சியர் ஆகியோரின் முக்கியமான பணிகள். ஆகவே, இந்தப் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தேவை என்று சொல்ல முடியாது. அதே நேரம், சமஸ்கிருதம் தெரிந்தால், அவர்களுக்கு அது கூடுதல் தகுதியாக இருக்கும். சில இடங்களில் சமஸ்கிருதம் அவர்களுக்கு பயன்படவும் செய்யும்” என்கிறார் கே.ஸ்ரீதரன்.
இப்போது நாம் இது சார்ந்த உண்மை நிலைக்கு வருவோம்.வடமொழி இல்லாமல் தமிழ் ஏது 1980 வரை நம் புழக்கத்தில் இருந்த நிலை மறந்து வரலாறு அறியாமல் பேசும் இவர்களின் செயலை கடந்த தலைமுறை மக்கள் நன்கு அறிவோம், ஆனால் இந்த தலைமுறையில் பலரும் தாய்மொழியான ஒழுங்கான தமிழ் பேச எழுதத் தெரியாத நபர்கள் தான் முன்னால் முதல்வரை ஜெயலலிதா என்று கூறுவதை செயலலிதா என்பது உச்சரிப்புப் பிழை
அது போலவே ஸ்டாலின் மற்றும் இராமதாஸ் மற்றும் கிருஷ்ணன் ஹரி பாஸ்கர் என்பதும் இஸ்லாமியம் கிருஸ்தவம் போன்ற பெயர்களும் வடமொழி இல்லாமல் உச்சரிப்பு இல்லை.அதுபோல நாம் சுதந்திரம் அடையும் முன் இருந்த மன்னர் ஆட்சியில் இதுபோன்ற நிலை இல்லை, இன்று வரலாறு தெரியாது உள்ள பலர் பிழையான வரலாறு எழுகின்றனர் . அதை தடுக்க. A chronologically organized historical study குரோனாலஜிக்கல் துறை உள்ளது
ஆனால் நீண்ட உறக்கத்தில் குரட்டை விடுவதால் தான் இந்த வரலாற்று பிழை நடக்கிறது, சோழப் பேரரசின் மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தி கூறும் கல்வெட்டு தமிழ் தானே இதை படித்த பிறகாவது இந்த வினா எழுப்பும் நபர்கள் உணரட்டும். "ஸ்வஸ்திஸ்ரீ். திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகைபாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண் திசை புகழ் தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும் திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன் எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோவி ராஜகேசரி ன்மரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு" இதில் தமிழ் வடமொழி இரண்டறக் கலந்தது. இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி பெயர்ப்பலகை பிழைகள் தான் தமிழ்நாட்டில் தற்காலத் தமிழ் நிலை உணர்த்தும் .. அதைத் தடுக்க இயலாத இவர்கள் வரலாற்று நிகழ்வு குறித்து நடத்தும் விவாதம் சமூகத்தில் ஏற்புடையதாக இல்லை என்பதே பொதுநீதி
கருத்துகள்