முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா நயம் உள்ள தலைவர்கள் பட்டியலிலுள்ள தமிழ்நாடு முதல்வர்கள் பெயரில் நாணயம் வெளியிட்டது மத்திய அரசு

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான ‘முத்தமிழ் அறிஞர்  டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியதற்காக, ரூபாய்.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும் படி மத்திய நிதியமைச்சகத்திடம்


தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் 2023 ஆம் வருடம் கோரப்பட்டது. இந்த நாணயத்தை, கடந்த ஜுன் மாதம் 3- ஆம் தேதியில் முடிந்த டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளில் வெளியிடத் திட்ட மிடப்பட்டிருந்தது. பல காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமலிருந்ததன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது தான் காரணம். தற்போது இவை அனைத்தும் முடிந்து நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பமிட்ட பின்னர் நாணயம் வெளியிட்டது 


தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்துடன், மேலும் இரண்டு நாணயத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதில், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு - விழா மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு முன், முன்னாள் முதல்வர்களான கு.காமராஜர், அறிஞர் சி.என். அண்ணாதுரை, டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்


உள்ளிட்ட தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த தலைவர்கள், மற்றும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் மற்றும் பலருக்கும் நாணயங்கள் இதற்கு முன் வெளியிடப்பட்டன தமிழுக்காகவும். தமிழ்நாட்டிற்காகவும் வாழ்ந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதிக்கு தற்போது 10 ரூபாய், 100 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன கடந்த காலங்களில் 

2004 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கு.காமராஜருக்கும்.                 முன்னாள் முதல்வர் டாக்டர் சி என் அண்ணாதுரைக்கு  2009 ஆம் ஆண்டிலும் நாணயம் வெளியிட்டது,    2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு 100 ரூபாய் நாணயங்களும் வெளியாகின. தற்போது டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் விண்ணப்பிப்பவர்களிடமிருந்து பெறப்படுகிறது. இதை வடிவமைக்கும் பணியை மத்திய நிதியமைச்சகம் செய்கிறது. இதனால், டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நாணயத்தின் மாதிரி வரைபடம் தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்டது. இது போல்,


முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்ட நினைவு நாணயம் வெளியிடப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளதற்கான உண்மையான காரணம் அவர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் தண்டனையும் (இறந்து போனார் என்பதால் இல்லை) 100 கோடி அபராதமும் நீதிமன்றத்தில் விதிக்கப் பெற்ற குற்றவாளியாகவும், இன்னும் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதமும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆகவே அவர் பெயரில் நாணயம் வெளியிட அரசாங்கத்தால் இயலாது என்பதே.

கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்த போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மனு அளித்திருந்தார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு நாணயம் வெளியிட மத்திய அரசு தயங்கி வருவதாகவே  கூறப்பட்டதாகத் தகவல். சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, சசிகலா நடராஜன், இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா நான்காண்டுகள் சிறைத் தண்டனையும்  முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு ரூபாய்.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூபாய்.10 கோடியும் அபராதம் விதித்தது.  இந்தத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்த பின்னர் நடந்த  மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது, இந்தத் தீர்ப்பு வந்த போது, முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணமடைந்த காரணத்தால், அவரது பெயர் தண்டணயிலிருந்து கைவிடப்பட்டது.  இந்த நிலையில்  30 கோடி மதிப்பிலான நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தவிர சசிகலா நடராஜன் உட்பட மற்ற மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். சசிகலாவும், இளவரசியும் அபராதத் தொகையைச் செலுத்தினர். ஆனால், சுதாகரன் அபராதத் தொகையைச் செலுத்தாததால், கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவித்தார். இதற்கிடையே தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதால், அவரது சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, தனி நீதிமன்றத்தில்  அவரது அண்ணன் ஜெயக்குமார் வாரிசுகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விரைவில் ஏலம் விட வலியுறுத்தி, பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞரான நரசிம்மமூர்த்தி, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் ஆஜராக கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவுளியை நியமனம் செய்தது. இதையடுத்து, சொத்துகளை ஏலம்விடும் பணியை பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் அமர்வு துரிதப்படுத்தியது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏலம்விட வேண்டிய முழு சொத்துகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964-ஆம் ஆண்டில் துவங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பெயரில் முதல் நினைவு நாணயம் வெளியானது. இந்த நினைவு நாணயங்கள் முக்கியத்தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக தொடர்ந்து வெளியாகின்றன.

இவற்றை, மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின் படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி உட்பட மூன்று நாணயங்கள் குறித்த உத்தரவை மத்திய அரசின் அரசிதழிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டது

ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம் பெற்றது1964 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை  150-க்கும் மேற்ப்பட்ட நினைவு நாணயங்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் 1952 நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், பண்டிட் தீன தயாள் உபாத்யாயா, பேறிஞர் சி என் அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன்..போன்ற பலருக்கும் நினைவு நாணயம் வெளிவந்துள்ள வகையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட நூறு ரூபாய் நாணயம் என்பது ஒரு சாதாரண நிகழ்வே. ஆனால், எந்த நாணய வெளியீடும் இவ்வளவு ஆடம்பரமாக, மிகுந்த பொருட் செலவில் நடத்தப்பட்டதேயில்லை. இப்படி வெளியிடப்படும் நாணயங்கள் வெறும் அடையாளச் சின்னங்கள் மட்டுமே. அதனால், இவற்றை பெருவாரியாக அச்சிட்டு மக்களின் நடப்பு புழக்கத்திற்கு விடுவதில்லை.  


பிரம்மாண்டமான முறையில் இந்த நிகழ்வுக்கு சென்னையை மிரட்டும் வண்ணம் ஏகப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள், ஐம்பதடிக்கு ஒரு மேடை என்பதாக அண்ணாசாலையில் அண்ணா சிலை தொடங்கி மெரினா கடற்கரையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் சமாதி வரை பல இடங்களில் அலங்கார மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற இதற்காக ஆள் பிடிக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலமாக தலைக்கு ஐநூறு ரூபாய் தந்து மக்கள் அழைத்து வரப்பட்டு சாலை யோரங்களில் நிறுத்தப்பட்டனர். கண்ணைக் கவரும் ஒளிவிளக்கு அலங்காரங்களால் மெரீனா கடற்கரைச் சாலை முழுக்கவும் தகதகத்தது. எல்லாமே மக்கள் வரிப்பணத்தில் அரங்கேற்றப்பட்டன. ஆனால் கடந்த காலத்தில் அறிஞர் சி.என். அண்ணாதுரை அவர்களின் நினைவு நாணய வெளியீடு எப்படி விளம்பரமின்றி நடத்தப்பட்டது என்பதை இன்றைய திமுக தலைமை நன்றாக அறியும் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு நாணய வெளியீடு கூட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை அழைத்து வெளியிடவில்லை.


இத்தனை ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்குப் பின்னணியிலுள்ள சம்பவங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. திமுகவின் வேண்டுகோளுக்கு இணங்கவே மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நாணயம் கொண்டு வரப்பட்டது. எனவே, திமுகவினர் முதல் தேர்வாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தான் விழாவுக்கு அழைத்தார்கள். வர மறுத்து விடவே  அடுத்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைக்கும் பொறுப்பை துரைமுருஅக்ன் தான் முன்னெடுத்துள்ளார். ராஜ் நாத் அவர்களோ, ”மோடியிடம் கலந்து பேசிய நிலையில் இராஜய சபையில் நமக்குப் பலம் குறைவாக உள்ளது. சில மசோதாக்களை திமுகவின் பத்து மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆகையால்  கலந்து கொண்டு சிறப்பித்தார், 


.இந்த நிகழ்வை ராஜ்நாத் சிங், ‘கருணாநிதிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் உள்ள உறவையும், அடல் பிஹாரி வாஜ்பேய் ஆட்சி தொடர டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி கொடுத்த ஆதரவுகளையும் நினைவு கூர்ந்து சூசகமாக பாஜக- திமுக உறவு என்பது நிகழ முடியாத ஒன்றல்ல..’ என்பதை உணர்த்தினார்.

இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனத்திற்கு உரியதாகும். பாஜக தலைவர்களை திமுக தலைவர்கள் வரவேற்ற விதம், அவர்களிடம் குழைந்து பேசிய விதம், அவர்களை உபசரித்த விதம், தாங்கள் அவர்களுக்கு பெரு முக்கியத்துவம் தருவதாக உணத்திய விதம்.. என எல்லா வற்றிலும் மிகையான அக்கறை  வெளிப்பட்டது நன்றாகவே தெரிந்தது. 



டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சமாதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்த போது இரண்டாம் வரிசையில் நின்ற அண்ணாமலையை முன்புறம் வர வேண்டி முதல்வர் மு.ங.ஸ்டாலின் ஒரு முறைக்கு இருமுறை அழைத்து முக்கியத்துவம் தரப்படுகிறது 

 பாஜக தலைவர்களுக்கு திமுக தலைமை நாங்கள் உங்கள் விசுவாசிகள் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது இதில் நாம் கவனிக்க வேண்டியது.,



தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருவது.

தொழிலாளர் விரோதச் சட்டங்களை – அதாவது 12 மணி நேர வேலை – உள்ளிட்டவற்றை அமல்படுத்தி வருவது,

அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து, ஒப்பந்தக் கூலிகளாக வேலை வாய்ப்பை மாற்றி வருவது

ஆலோசகர்கள் என்ற பெயரில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையாக ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ஊதியத்தில் அனைத்து துறைகளிலும் தனியார் துறை வல்லுனர்களை அமர்த்தும் போக்கு.

 கார்ப்பரேட்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தடங்களின்றி தருவதற்கு தோதாக கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்ப்பு மசோதா.

இயற்கை வளங்களை சூறையாடி, தொழிற்சாலைகள் நிறுவத் தோதாக அதி தீவிர நகரமயாக்கல்.

பழவேற்காடு தொடங்கி தமிழகத்தின் பல இடங்களில் அதானி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட நிலங்கள்.

மின்சாரத் துறையில் அதானியின் ஏகபோகத்தை ஏற்று மிக அதிக விலைக்கு அதானியிடம் மின்சாரம் கொள்முதல் செய்வது.

கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி கற்பழித்து கொலையானது  தொடங்கி வேங்கை வயல் குடி நீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது, ஆம்ஸ்டிராங் கொலை என அனைத்திலும் சம்பந்தப்பட்ட பாஜகவினரை காப்பாற்றும் விதமாக காவல்துறை செயல்படுவது.

தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பது.

தமிழ்நாடு இந்து அற நிலையத் துறையில் ஜனாதனிகளின் கைகள் ஓங்கி இருப்பது.

பக்திப் பரவசத்தை உருவாக்கி  முருகக் கடவுள் மாநாட்டை நடத்துவது..என திமுக எப்போதோ திசைமாறி பயணிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, இனி பாஜக திமுக உறவைக் களம் காணும் .எடப்பாடி கே.பழனிச்சாமியும், டி.ஜெயக்குமாரும் பேசுவது டூ லேட்.  திமுகவின் பெயரால், பாஜகவே இங்கு ஆட்சி செய்கிறதோ.. என்று கலவரப்படும் அளவுக்கு நிலைமை ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நகர்விலும் காணக் கிடைக்கிறது. தாங்கள் அடிக்கும் கொள்ளைகள், ஊழல்களுக்கு பிராசினையில்லாத ஒரு அரசியல் உறவை பேண வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு  ஏற்பட்டுள்ளது.

எது எப்படியானாலும்,  உடனடியாக திமுக- பாஜக கூட்டணி என்பது பகிரங்கமாக வெளிப்படாது. ஏனென்றால், அது திமுகவின் இமேஜை பாதிக்கும். ஆகவே, 2026 தேர்தல் நெருக்கத்தில் அதிமுக ஒத்துவராத பட்சத்தில் திமுகவை கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க பாஜக எந்த மாதிரியான அஸ்திரத்தைக் கையில் எடுக்கிறது என்பதை பொறுத்தே திமுகவின் எதிர்காலம் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...