தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்தியத் துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி, மற்றும் அமைச்சர் TRB ராஜா, நடிகர் நெப்போலியன் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பெபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ராசிப், இன்பினிக்ஸ், அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூபாய். 900 கோடி முதலீட்டில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்காவின்
சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்குமிடையே ரூபாய். 250 கோடி முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைகடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D Center in Semiconductor Technology) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
கருத்துகள்