முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செஃபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு

அதானி குழுமத்தின் பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளன. அந்த பங்குகளின் விளைவுகள் காரணமாக சங்கிலி விளைவு போல மற்ற பங்குகளின் மதிப்பும் சரியாய் வாய்ப்புகள் உள்ளன.


2023ஆம் வருடம் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இந்த விவகாரத்தில் அப்போது செபி பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திலும் அதானிக்கு எதிராக எந்த உத்தரவுகளும் பிறப்பிக்கவில்லை.

அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) யின் தலைவர் மாதபி புச் க்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. முறைகேட்டில் உடந்தை என்பதாலேயே அதானி குழுமம் மீது SEBI தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.




அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி 


 அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம். அதானி குழுமம் எந்த அச்சமுமில்லாமல் பணிகளைச் செய்வதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அதானிக்கிடையே உள்ள வியாபாரம் கலந்த உறவே காரணம்.



தற்போதைய செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டுப் பங்குச் சந்தைப் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதானியின் பங்குகளில் இவர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என செபி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

மதாபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலில் சிங்கப்பூரில் ஜூன் மாதம் 5 ஆம் தேதி, 2015 ஆம் ஆண்டில் ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 ல் தங்களின் கணக்கைத் தொடங்கியுள்ளனர். எங்களுக்குக் கிடைத்த விசில்ப்ளோவர் ஆவணங்கள் மூலம் அந்தத் தம்பதியரின் நிகர மதிப்பு $10 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே பங்குகளில் அதானி குழுமமும் முதலீடுகளைச் செய்துள்ளது. செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டுப் பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை செபி மீது ஹிண்டன்பர்க் முன் வைத்துள்ளது.


 இதன் காரணமாக நாளை பங்கு சந்தை சரிவில் இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளன. அந்த பங்குகளின் விளைவுகள் காரணமாக சங்கிலி விளைவு போல மற்ற பங்குகளின் மதிப்பும் சரியாய் வாய்ப்புகள் உள்ளன.


நாளை அதானி குழுமத்தில் இருந்து பலர் பங்குகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதானி குழுமம் காரணமாக மற்ற நிறுவனங்களின் பங்குகளும் சரியலாம். இது அதானி குழுமம் என்பதை தாண்டி செபி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆகும். செபிதான் பங்கு சந்தை ஒழுங்காற்று வாரியம்.. அப்படி பட்ட வாரியம் புகாரில் சிக்கி உள்ளது.


இதனால் அதானி குழுமம் என்று இல்லாமல் மொத்தமாகவே பங்கு சந்தை சரியாய் வாய்ப்புகள் உள்ளன. மொத்தமாக பங்கு சந்தையில் பல பங்குகள் படுக்க வாய்ப்புகள் உள்ளன.


அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது. கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது.

தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது. இதை அதானி குழுமம் மறுத்து இருந்தாலும், ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் தங்கள் ரிப்போர்ட்டில் உறுதியாக உள்ளது.                        தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியின் முதலாவது பெண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன். தேசியப் பங்குச் சந்தையின் ரகசியங்களை ஏதோ ஒரு இமயமலைசா சாமியாருக்கு 'கடைவிரித்து' விளையாடியவர். இதனால் பல்லாயிரம் கோடியை சோ கால்ட் இமயமலை சாமியார் எனும் மர்ம ஆசாமிகள் அள்ளிக் குவிக்க வெளிநாடுகளில் துள்ளித் திரிந்தார் சித்ரா ராமகிருஷ்ணன். ஒருவழியாகச் சிக்கியதும் சிறைக் கம்பிகளை எண்ணியவராவார், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்திலும் வசமாகவே பிடிபட்டவர் சித்ரா ராமகிருஷ்ணன். ஆனால் சித்ராவின் சித்து விளையாட்டுகளை ஏதோ சில சக்திகள் பரபரப்பாக்காமலேயே பம்மிக் கொண்டிருந்தன.இப்போது சிக்கியிருப்பவர் மாதவி புரி பிச். இந்தியப் பங்குச் சந்தையை இப்போது முறைகேடாகப் பயன்படுத்தி வரும் அதானி குழுமத்தின் பல நூறு வெளிநாட்டு போலியான கம்பெனிகளில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியின் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவரது பெயரிலும் ஏராளமான பங்குகள் இருந்தன என அம்பலப்படுத்தி இருக்கிறது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை. இதனை மாதவி புரி புச், அவரது கணவர் மறுத்துள்ளனர். இருந்தாலும் கடந்த பல ஆன்டுகளாக அதானி குழுமத்துடன் எப்படி எல்லாம் மாதவி புரி புச் நெருக்கமாக இருந்து ஆதாயமடைந்தார் என ஆதாரங்களையும்  சேர்த்தல்லவா அமெரிக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலும் இனிவரும் நாட்களில் இந்த விவகாரம் பெரும் புயலாய் கிளம்பத் தான் போகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...