முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் ,தலைவர்களே மேயராக சட்ட வழிவகை உண்டா?

நான்கு புதிய மாநகராட்சிகளுடன் மூன்று புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு

அதற்கான அரசாணைகளைத் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவா்களிடம் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிய நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.ஆா்.பெரியகருப்பன், சென்னை மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் தா.காா்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். தமிழ்நாட்டில் 21  மாநகராட்சிகள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. நகராட்சிகள், மாநகராட்சியாவதால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா என்பதைக் காண்போம். பழமையான மாநகராட்சி சென்னை தான்.  1688-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29- ஆம் தேதி பிரிட்டீஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசால் உருவாக்கப்பட்டது. சென்னை தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான மாநகராட்சியாகும். பின்னர் தமிழ்நாட்டில் இரண்டாவது மாநகராட்சி மதுரை அது  1971-ஆம் ஆண்டில் மாநகராட்சியானது. அதன்பிறகு கோயம்புத்தூர் 1981-ஆம் ஆண்டு மாநகராட்சியானது. பின்னர் 13 ஆண்டுகள் எந்த ஒரு நகரமும் மாநகராட்சியாக அறிவிக்கப்படாமல் இருந்தது. காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த 1994-ஆம் ஆண்டு சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி  ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாறியது.



பின்னர் 14 வருடங்கள் எந்த நகராட்சியும் மாநகராட்சியாக அறிவிக்கப்படவில்லை. எனினும் காலஞ்சென்ற டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த 2008-ஆம் ஆண்டு, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டன. காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதா முதல்வராக இருந்த 2014-ஆம் ஆண்டு திண்டுக்கல் நகராட்சி மாநகராட்சியானது. எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்த 2019-ஆம் ஆண்டு ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.  2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், கடந்த 3 ஆண்டுகளில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளானதுடன். மேலும் 28 பேரூராட்சிகளும் நகராட்சிகளாயின,


அதனால் தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆகவும், நகராட்சிகளின் எண்ணிக்கை 138 ஆகவும் அதிகரித்தது. தற்போது புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி சட்டத்தின் படி ஒரு உள்ளாட்சி அமைப்பை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்றால் அதன் மக்கள் தொகை 3 லட்சமாக இருக்க வேண்டும், நிதியாண்டு வருமானம் ரூபாய்.30 கோடியாக இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

அதன்படியே வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறது.அண்மையில் அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் படி 2 லட்சம் மக்கள் தொகையும், ரூபாய்.20 கோடி ஆண்டு வருமானமும் இருந்தால் மாநகராட்சியாக அறிவிக்கலாம் எனக் கூறப்பட்டது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் உடனடியாகவே ஒப்புதல் தந்தார். அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  நகராட்சிகள் எல்லாம் மாநகராட்சிகள் என்று அறிவிக்கப்பட்டால் தரம் உயருமா? என்றால் நிச்சயம் மாறிவிடாது.! எல்லா நகரங்களும் சென்னை, மதுரை, கோயம்புத்தூருக்கு நிகராக மாறிவிடாது. ஏனெனில் நகராட்சி மாநகராட்சியாக மாறினாலும், அங்கு ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் எல்லாம் மாற்றமடைய நீண்ட காலமாகும். மாநகராட்சியாக மாறினால் வரிகள் மட்டுமே உயரும். அதுமட்டுமின்றி, மாநகராட்சியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளும் மாநகராட்சிக்குள் வரும். அப்படி வரும் போது வரி வருவாய் உயரும். அதனை வைத்துத் தான் மாநகராட்சிக்கு உரிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தற்போதைய நிலையில் நகராட்சிகள் எல்லாம் மாநகராட்சிகளாக மாறினாலும், உண்மையாக மிகப்பெரிய பெரு மாநகராட்சிகள் என்று சொல்ல வேண்டும் என்றால், சென்னை, மதுரை, கோயம்புத்தூர்,  திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்பூர், ஓசூர் ஆகிய நகரங்களைத் தான். இதில் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சி அடையும் நகரங்கள் என்றால், கோயம்புத்தூர், திருப்பூர், ஓசூர் ஆகிய ஊர்களைச் சொல்லாம். இந்த நகரங்களில் உள்கட்டமைப்புகள் இந்த நகரம் வளரும் வேகத்திற்கு மாற வேண்டும் என்றால் கண்டிப்பாக மாநகராட்சியாக இருக்க வேண்டியது மட்டுமின்றி, மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளும் மாநகராட்சியில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சேர்க்க வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் தான் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.  இந்தியாவிலேயே, தமிழ்நாடு தான் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வதால், நகர்ப்புறங்களை மட்டும் நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதி மக்களுக்கும் அதே வசதிகள் கிடைக்க வேண்டும். அதற்கு மாநகராட்சியாக மாறினால் தான் சாத்தியம் என்பதால், அரசு அடுத்தடுத்து மாநகராட்சியாக அறிவித்து வருகிறதது.

மாநகராட்சியாக அறிவிப்பின் பின்னணியைப் பார்த்தால், பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, குடிநீர், சாலை, பாதாளச் சாக்கடை, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்க வேண்டும் என்பதற்காக அருகிலுள்ள நகரங்களோடு இணைத்து நகராட்சியாகவோ அல்லது மாநகராட்சிகளாகவோ உருவாக்கப்படுகிறது. மாநகராட்சியானால் மக்களுக்கு நஷ்டம் எனப் பார்த்தால், நிச்சயம். வரிகள் எல்லாமே உயரும். நிலத்தின் அரசு மதிப்பீடு அடியோடு மாறும். 100 நாள் வேலை திட்டம் இனிக் கிடைக்காது.


சொத்து வாங்குவது விற்பது தொடங்கி எல்லாமே விலை அதிகமாக இருக்கும். லாபம் எனப் பார்த்தால், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உருவான பின்னர் உயரும். கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகளை விட நகரங்களில் அதிக வசதிகள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வசதிகள் எல்லாமே கிடைக்கும். மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு தரும் அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும்.



தமிழ்நாட்டில் புதிதாக உருவான திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி அகியவை நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகவே திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நகர்ப்புற மக்கள் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை 53 சதவீதத்திற்கு மேலுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது.

மாநிலத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்தச் சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டுமென அரசு கருதுகிறது. திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, ஆகிய நான்கு மாநகராட்சிகளிலும்  அரசால் கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிற நிலையில்,

வரலாற்றுப் பின்னணி கொண்ட 1948 ஆம் ஆண்டில்  சுதந்திரமடைந்த தனி ஸ்டேட்டாக விளங்கிய நகர் புதுக்கோட்டை, கோவில் நகரம் திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரம் காரைக்குடி  ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென வந்த கோரிக்கைகளை ஏற்று அந்த நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள கிராமம் விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் 30.03.2023 ஆம் நாளில் அறிவித்ததன் படி, புதுக்கோட்டை நகராட்சியில் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாக வும், திருவண்ணாமலை நகராட்சியில் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாகவும், நாமக்கல் நகராட்சியில் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியாகவும், காரைக்குடி நகராட்சியில் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி எனவும் மொத்தம் நான்கு புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து 15.3.2024 ஆம் தேதியன்று ஆணைகள் வெளியிடப்பட்டதனடிப்படையில், அரசு  மாநகராட்சியாகிறது.1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும்  .                                   --                     -விளம்பரம்-
                          -விளம்பரம் -
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளும் மாநகராட்சிகளானதால் அதில் இணைக்கப்படும் உள்ளாட்சிப் பகுதிகள் எவை என்பதற்கான தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

நான்கு புதிய மாநகராட்சிகளில் இணையும் உள்ளாட்சிப் பகுதிகள் குறித்து அரசிதழில் முழு தகவல். ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, மாநகராட்சிகளுடன் இணையும் பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகள்  குறித்த விவரங்கள் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி



உருவாக்கம் காரைக்குடி நகராட்சியுடன் கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் (மானகிரி சுக்கானேந்தல்) ஆகிய 5 கிராம ஊராட்சிகள் இணைகின்றன.

திருவண்ணாமலை மாநகராட்சி



உருவாக்கப்படும் நிலையில், திருவண்ணாமலை நகராட்சியுடன், வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், சோ.கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய 18 கிராம ஊராட்சிகள், அடி அண்ணாமலை காப்புக்காடு பகுதியும் இணைக்கப்படுகிறது. அதேபோல்,                     புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்படும் நிலையில், புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டுர் (ஒரு பகுதி), 






9 ஏ மற்றும் 9 பி நந்தம்பண்ணை, வெள்ளானூர் (ஒரு பகுதி), திருவேங்கைவாசல் (ஒரு பகுதி), வாகவாசல், முள்ளூர் ஆகிய 11 ஊராட்சிகள்







மற்றும் கஸ்பா காட்டின் மேற்குப் பகுதி ஆகியவை இணைக்கப்படுகின்றன.

நாமக்கல் மாநகராட்சியில்,


நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி, ஆகிய 12 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது.மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் அவர்களின் பதவிக்காலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திற்கும் மாறுபடும். பெங்களூரு , கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் செயல்முறை மறைமுகமாக ஒரு ஆண்டு பதவிக்காலம், மும்பை மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகள் பதவிக்காலத்துடன் மறைமுகத் தேர்தல்கள் மற்றும் மத்திய பிரதேசத்தின் போபாலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது . 

இந்திய மாநிலங்களான பீகார் , சத்தீஸ்கர் , ஹரியானா , ஜார்கண்ட் , மத்தியப் பிரதேசம் , ஒடிசா , உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய நகரங்களின் குடிமக்களால் மேயர்களை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கான நகராட்சிகளை நிர்வகிக்கும் சட்டங்களில் அந்தந்த விதிகளை உருவாக்கியுள்ளன.                                                            -விளம்பரம்-

                          -விளம்பரம்-இந்தியாவிலுள்ள நகரங்களின் மேயர்களின் பதவிக்காலம் ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை மாறுபடும்.தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் முடிவினை அறிவித்தவுடன் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 25, படிவம் 26 மற்றும் படிவம் 27-ல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 26, படிவம் 27 மற்றும் படிவம் 28-ல் தேர்தலுக்கான வெற்றி பெற்ற சான்றினை உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு வழங்குவார்.

போட்டியில்லாத தேர்தலைப் பொறுத்தமட்டில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுதலுக்கான கால அவகாசம் முடிந்த பின்னர் இருக்கும் ஒரே வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு படிவம் 25, படிவம் 26 மற்றும் படிவம் 27-ல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 26, படிவம் 27 மற்றும் படிவம் 28-ல் உரிய தேர்தலுக்கான சான்றினை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்குவார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்படும் நாளில் நிலைக்குழு மற்றும் சட்டப்பூர்வ குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்படும் மறைமுகத் தேர்தல்களுக்கான கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரால் நடத்தப்பட வேண்டும்.



.மாநகராட்சி அங்கத்தினர்கள் தங்களுக்குள் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். அதற்கு மாநகராட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை மேலாண்மை செய்ய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார். இவர் மாநகராட்சி ஊழியர்களை மேற்பார்வையிடுவதுடன் மாநகராட்சி எடுக்கும் முடிவுகளை செயலாற்றும் பொறுப்பை உடையவராகிறார். ஆண்டின் நிதிநிலை அறிக்கையையும் தயாரிக்கிறார். 



நான்கு மாநகராட்சியிகளும் சட்டப்படி முறையாக அறிவிக்கப்பட்டது அதன் ஆணையர்களும் அரசு அதிகாரங்களின் படி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு விட்டனர், ஆனால் ஏற்கனவே நகராட்சித் தலைவர் தேர்வாகி பதவியிலிருந்து தேர்தல் இல்லாமல் மாநகராட்சியின் மேயராக பதவி உயர்த்த சட்ட விதிமுறைகளின் படி அரசுக்கு அதிகாரம் உண்டா ? இல்லை நகராட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தி அதன் பின்னர் அறிவிக்க தேர்தல் ஆணையம் மூலம் தான் முடியும் என்ற அடிப்படை விபரம் கூட அறியாமல் அரசியல் நடவடிக்கைகளில் பலர் உள்ளனர், ஆகவே இதற்குத் தீர்வு எப்போது வரும் என்பதை உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்ந்த செயலாளர் தான் தீர்வு காண வேண்டும்.  இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் நன்றி அறிவிப்பு மற்றும் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்  நாராயணன் திருப்பதி கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “காரைக்குடியில் போலி மருத்துவரை போன்று போலி மேயர் உள்ளார். காரைக்குடி அதிகாரபூர்வமாக மாநகராட்சியாக மாறாத போது, நகராட்சித் தலைவர் எப்படி மேயர் ஆனார்.



நகராட்சியில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும்.   அதிகார மமதையோடு நடப்போர் யாராக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிக்கும். என்றார்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம்:- இந்திய அரசியலமைப்பில் 73 & 74 வது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது, அதில் 74 வது திருத்தச் சட்டம் (நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்தது): மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-க்கு கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் படியும் பின்பற்றப்படும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 243-ZA உடன் உள்ள 243-K சட்டப்பிரிவின் படி அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றன.தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், 1994
(தமிழ்நாடு சட்டம் 21 /1994)


தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1958 ஐ ரத்து செய்து மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாகும்.                                                   i) சென்னை மாநகரம்;
(ii) மதுரை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1971 (தமிழ்நாடு சட்டம் 15/1971)ன் கீழ் அமைக்கப்பட்டது தான் மதுரை மாநகரம்;
(iii) கோயம்புத்தூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1981 (தமிழ்நாடு சட்டம் 25/1981)ன் கீழ் உருவாக்கப்பட்டது தான் கோயம்புத்தூர் மாநகரம்;
(iv) தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 (தமிழ்நாடு சட்டம் V இன் 1920) கீழ் உருவாக்கப்பட்ட நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் தொழில் நகரங்கள்; மற்றும் நிர்வாக விதிமுறைகள் 
(v) கன்டோன்மென்ட் சட்டம், 1924 (மத்திய சட்டம் II 1924) கீழ் அமைக்கப்பட்ட கண்டோன்மென்ட்கள் சட்டம் ஆகியவைகளை கடந்து எந்த நடைமுறையும் அரசு செய்ய இயலாது.

இதை மீறுவது குறித்து நீதிமன்றங்களும் கண்காணிக்கும் நிலையில் சட்டம் செயல்படும். நமது நட்பில் உள்ள பல மூத்த சட்ட வல்லுநர்கள் கருத்தாக இதில் பொது நீதி யாதெனில்:- தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை விடுத்து வேறு பதவியை பதவி உயர்வு மூலம் பெறுவதற்கு இயலாதது தேர்தல் மட்டுமே தீர்வு இந்தச் சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறுதல் நடந்தால் யாரும் உயர் நீதிமன்றத்தை நாடலாம் quo warranto writ (க்ஃவோ வாரண்டோ) உத்தரவின் நோக்கம் அதன் அதிகாரத்தின் அளவு மற்றும் அது தீர்க்கக்கூடிய விஷயங்களைக் குறிக்கிறது. அதன் முதன்மை நோக்கம் ஒரு பொது அலுவலகம், பதவி அல்லது உரிமையை வைத்திருப்பதற்கான ஒரு தனிநபரின் அதிகாரத்தை சவால் செய்வதாகும், அதே சமயம் அது அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பதவியை வகிக்கும் நபருக்கு தேவையான அதிகாரம் அல்லது தகுதிகள் இல்லை என்று நீதிமன்றம் தீர்மானித்தால், நீதிமன்றம் அந்த அலுவலகத்தை காலியாக அறிவிக்கலாம் அல்லது அலுவலகத்துடன் தொடர்புடைய அதிகாரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அந்த நபருக்கும் உத்தரவிடலாம்.பொது அலுவலகங்கள் அல்லது பதவிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதில்லை அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த, அரசாங்கத்தால் அல்லது அட்டர்னி ஜெனரல் போன்ற ஒரு அரசு வழக்கறிஞர் மூலம் க்ஃவோ வாரண்டோவின் ரிட் மனு தாக்கல் செய்யப்படலாம். மேலும், சில அதிகார வரம்புகளில், இந்த விஷயத்தில் நேரடி ஆர்வமுள்ள தனியார் தனிநபர்களும் க்வோ வாரண்டோ ரிட் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படலாம். ஒரு பொது அலுவலகம் அல்லது பதவி சட்டவிரோதமாக நடத்தப்படுகிறது அல்லது அதன் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று நம்பும் நபர்கள் இதில் அடங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...