டாட்டா டிடிஎச்சில் இனி சில சேனல்களைக் காண முடியாது. என அறிவிப்பு
SONY குழுமச் சேனல்களை டாட்டா பிளே நீக்கி உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சோனி குழுமத்தில் சோனி என்டர்டைன்மென்ட், சோனி பிக்ஸ் மற்றும் சோனி மேக்ஸ் உள்ளிட்ட பல சேனல்கள் உள்ளன.
இதனை யாரும் பார்ப்பதில்லை எனக் கூறி டாட்டா ப்ளே இந்தச் சேனல்களை நீக்கி உள்ளது. இதற்குப் பதிலாக வேறு சேனலைத் தேர்வு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள sony குழுமம், வாடிக்கையாளர்கள் தரவை தணிக்கை செய்யுமாறு கூறியதற்கு பழிவாங்கப்பட்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதில் வியாபார நோக்கில் நடக்கும் நிகழ்வு இது ஆனால் கட்டண சேனல்கள் விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என விதிமுறைகள் உள்ளன அதை இந்த ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்கள் உணர்வது எப்போது, அதை தடுக்க தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகும்
கருத்துகள்