கொள்ளிடம் ஆற்றில் சாய்ந்த மின்சார உயர் அழுத்தக் கோபுரம்.
ஆற்றில் தண்ணீரா வரப் போகிறது என்ற நோக்கில் ஊழல்வாதிகள் கூடாரம் செய்த செயல் காரணமாக கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்தக் கோபுரம் காரணமாக பாலத்தில் போக்குவரத்துக்கள் நிறுத்தம்
திருச்சிராப்பள்ளி திருவானைக்கோவில் நம்பர் ஒன் டோல்கேட் இடையே கொள்ளிடம் புதிய பாலம் அருகில் இன்று அதிகாலை ஆற்றில் சாய்ந்தது உயர் மின்னழுத்தக் கோபுரம்.
கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகிலுள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 kv) உயர் மின்னழுத்த ராக்ஷஸக் கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ளது தண்ணீர் வரத்து காரணமாக இன்று அதிகாலை ஆற்றில் சாய்ந்தது.
மேட்டூர் அணை நிரம்பி திறக்கும் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் முழுவதுமாக காவிரியில் வருவதன் காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி தண்ணீர், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இருகரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது.
நேற்று காலை சாய்ந்த நிலையில் காணப்பட்ட உயர் மின்னழுத்தக் கோபுரத்தின் அஸ்திவாரத் தூண்கள் தண்ணீர் செல்லும் வேகத்தில் அடித்து செல்லப்பட்டதால் நேற்று காலை முதலே மெதுவாக சாய்ந்து கொண்டே இருந்தது. மின்சார வாரியத்தின் ஊழியர்கள் அதை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தண்ணீர் அதிகம் செல்வதன் காரணமாக தோல்வியடைந்த நிலையில் இன்று அதிகாலை சாய்ந்திருந்த உயர் மின்னழுத்தக் கோபுரம் முழுவதும் ஆற்றில் விழுந்தது. இதனால் உயர் அழுத்த மின்சாரக் கோபுரங்களில் கட்டப்பட்டிருந்த மின்சார கம்பிகள் பாலத்தின் மீதே விழுந்தன.
ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நேற்று காலையிலேயே துண்டிக்கப்பட்டதுடன் பாலத்திலும் போக்குவரத்தைத் தடை செய்து காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள்